குறளின் குரல் – 430

21st June 2013
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
                                  (குறள் 422: அறிவுடமை அதிகாரம்)
Transliteration:
senRa iDaththAl – Whereever the mind goes, ie., wanders
selaviDA – not allowing,
thIthu orIi – keeping the evil away
nanRinpAl – towards good ways
uyppadh(u) – to reach us is
aRivu – wisdom
One must not let his/her mind wander, keep evil ways and deeds away, and must stay in good deeds; that is known as wisdom – Says vaLLuvar. In Thirumanthiram, ThirumUlar says, one must not control the five sense or their respective organs because, such a stern practice would render a person as inanimate or dead object. What would be ideal is to use the same approrpriately and keep them operating in good ways. The verse says, only fools would demand that all five senses must be shut. Even there is none in heavens that have controlled five senses. Since I realized such an effort befits the dead, I have realized not to control my five senses.
Not letting the mind wander, and keeping the evils away
Wisdom sets a persons’s mind in good ways without sway
தமிழிலே:
சென்ற இடத்தால்மனம் எங்கெல்லாம் சென்று அலைகிறதோ
செலவிடாஅங்கெல்லாம் செல்லவிடாது
தீது ஒரீஇதீதெல்லாம் தவிர்த்து
நன்றின்பால்நல்ல வழிகளில்
உய்ப்பது – கொண்டு சேர்ப்பதே
அறிவுஒருவருடைய அறிவுதான்
ஒருவர் தம் மனதை அது செல்லுமிடமெல்லாம் சென்று அலையவிடாமல், தீயவழிகளைத் தள்ளிவிட்டு, நல்லவழிகளில் கொண்டு சேர்ப்பதே  அறிவுடமையாகும்.
திருமந்திரத்தில் திருமூலர் ஐம்புலன்களை அடக்கவேண்டாம் என்கிறார். ஏனெனில், அடக்கினால், உயிரற்ற சடப்பொருள் அல்லது சடலப்பொருள் ஆகிவிடுவோம். அடக்குவதற்கு பதிலாக, புலன்களை தகுந்த வழியில் பயனுறுத்த வேண்டும். இதைத்தான் வள்ளுவரும் கூறுகிறார். திருமந்திரப்பாடல் இதுதான்.
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை

அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
அறிவில்லாதவர்களே புலனடக்கம் வேண்டுமென்பார். அறிவுள்ளவர்கள் புலனொழுக்கம் வேண்டுமென்பார்கள். புலன்களை அடக்கிய வானோர்கள் கூட இல்லை. ஐம்புலன்களையும் அடக்கிவிட்டால், சடப்பொருளாகிவிடுவோம் அதனால் அவற்றை அடக்காமல், இயல்பான செயல்களைச் செய்யும், அறிவே ஒருவர் பெறவேண்டும் இதைத்தான் வள்ளுவரும் சொல்லுகிறார்.
இன்றெனது குறள்:
அலைவையில் ஆழ்த்துமறம் அல்ல அகற்றி
நிலையில் நிறுத்து மறிவு
alaivaiyil AzththumaRam alla agaRRi
nilaiyil niRuththu maRivu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment