குறளின் குரல் – 439

 1st July 2013
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
                            (குறள் 432: குற்றம் கடிதல்அதிகாரம்)
Transliteration:
ivaRalum mANb(u)iRandha mAnamum mANA
uvagaiyum Edham iRaikku
ivaRalum – miserliness, avarice both are meant by this word
mANb(u) iRandha – greatness lacking
mAnamum – pride
mANA – useless, unworthy, and distasteful
uvagaiyum – happiness
Edham – faults of
iRaikku – the rulers
In this verse, vaLLuvar lists three faults that must not be there for the rulers; they are lack of generosity to give to others, pride without dignity, and happiness in things that are disgraceful to be happy about. The word “ivaRal” has the meanings of avarice, and miserliness. Cheevaga ChinthAmaNi, one of five major Tamil works (kAppiyam) says that without this a ruler must rule. (ivaRalinRi kOththozhinaDaththu manRE).
Kaliththogai, says Munificence is abiding by virtue, and such benevolent people are without malince and their wealth will prosper and grow. For a ruler all these are essential attributes (Idhalil kuRaikATTA dhaRanaRin dhozhugiya thIdhilAn selvam pOl).
Another commentator, PariperumAL, says that the word ivaraldenotes, the desire in things that don’t belong to self as well as lack of benevolence to give to others. The gracless honor is something knowing what was begun was not a righteous and fruitful one, pursuing just because of false pride and self-bloatedness. DuryodhanA perished having such vein glorious attitude.  By offending, causing pain to the simpletons that are less powerful and feeling happy is the recipe for ruin; The story of vAthApi and ilvalan who troubled sages met their destiny through sage agasthyA, is an example of this.
“Miserliness, undignified pride, unworthy and distasteful
 Happiness, the faults of rulers deemed to be disgraceful”
தமிழிலே:
இவறலும் – கொடையின்மை, பேராசை இவை இரண்டும் இவறலாம்
மாண்பு இறந்த – பெருமையும் சிறப்பில்லாத அற்ற
மானமும் – மானமும் (போலியான மானம்)
மாணா – வீணானவைகளுக்கும், தீயவற்றுக்கும்
உவகையும்மகிழ்வதும்
ஏதம் – குற்றமாம்
இறைக்கு – ஆள்பவர்களுக்கு
இக்குறளில் ஆள்வோர்க்கு இருக்கக்கூடாத குற்றங்களாக, வள்ளன்மை அற்ற தன்மை, பெருமையும் சிறப்பும் இல்லாத போலியான மானம், வீணானன தீயவைகளிலே கொள்ளும் உவகை இவற்றைக் கூறுகிறார். இவறல் என்ற சொல் பேராசை மற்றும் கொடையின்மை இவற்றைக்கூறும். இவறல் இருக்கக்கூடாமையை சீவக சிந்தாமணியும் “இவறலின்றிக் கோத்தொழினடாத்து மன்றே (சீவக. 2583)” கூறுகிறது.
ஆள்வோர்க்கு ஏன் இவறல் கூடாது என்பதற்கு, கலித்தொகை வரிகள் காரணம் கூறுகின்றன. “ஈதலில் குறைகாட்டா தறனறிந் தொழுகிய தீதிலான் செல்வம் போல்”  என்ற வரிகள் ஈகையுடைமையே அறம் அறிந்து ஒழுகல் என்றும் அத்தகையோர் தீதிலார் என்றும் அவரது செல்வம் வளரத்தக்கது என்றும் கூறுகின்றன. ஆள்வோர்க்கு இவை அத்துணையுமே தேவை.
பரிப்பெருமாள் என்னும் உரையாசிரியர் இவறலை, தனக்கு உரிமையில்லாவதற்றில் பெருவிருப்பம் கொள்வது மற்றும் உரிய பொருளை பிறர்க்கு கொடுக்கும் வள்ளன்மை இல்லாமை என்னும் இரண்டுமாயது என்கிறார்.  மாண்பு இறந்த மானமானது தொடங்கிய வினை நன்மை பயவாதெனினும் தொடர்ந்து வீன் பெருமைக்காகக் தொடர்ந்து அதனாலேயே அழிவது. துரியோதனன் அழிந்ததும் இதனால்தான். எளியோரை வதைத்து அதில் உவகைக் கொண்டதால் அழிந்தார்கள் வாதாபியும் இல்வலனும்.
இன்றெனது குறள்:
ஈதலின்மை சீரழிந்த பெற்றிமை வீண்மகிழ்வு
ஏதமூன்றும் என்பாராள் வோர்க்கு
Idhalinmai sIrazhindha peRRimai vINmagizhvu
EdhamUnRum enbArAL vOrkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment