குறளின் குரல் – 444

6th July 2013

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
                            (குறள் 437: குற்றம் கடிதல்அதிகாரம்)
Transliteration:
seyaRpAla seyyA dhivaRiyAn selvam
uyaRpAla dhanRik keDum
seyaRpAla – Worthy good deeds
seyyAdhU – without doing them
ivaRiyAn – who does not like to be charitable and miserly
selvam – his wealth
uyaRpAladh(u) – without use, later
anRikkeDum – diminish and eventually will all be lost.
For rich people, it is their duty to care for everybody in their society, community where they dwell and help them in need. The fault of being miserly, will diminish the wealth in possession and eventually completely obliterate the same.  Auvayyar says, those who don’t share their wealth with needy will lose their wealth to bad and unworthy beneficiaries.
nAlaDiyAr says, if somebody guards the wealth without using it for essential food for himself and others that are with him,  does not make himself worth of popularity, fame,  does not contribute to remove the relatives miseries, does not offer help who seek that, then his pursuit to safeguard his wealth is a wasted one and his wealth is considered lost.
Kambar also reflects a similar thought in Ramayana, “kArkAlap paDalam”, “thagavizhandhu azhivinan poruL pOgavARozhugalAn selvam pOnRavE”.
“Miserly minds that do not use wealth for worthy ways
 Commit the fault of not sharing; all their wealth mislays”
தமிழிலே:
செயற்பாலசெய்யத்தக்கவையான நற்செயல்களைச்
செய்யாது – செய்யாதொழியும்
வறியான் – விரும்பாதவன், கருமித்தனம் செய்கிறவன்
செல்வம் – செல்வமானது
உயற்பாலது – பின்னர் பயனாவது
அன்றிக்கெடும் – இல்லாமல் குறைந்து ஒழியும்
செல்வர்க்கழகு செழுங்கிளைத் தாங்குதல் என்பர் – அதாவது தன்னைச் சார்ந்தவர்களை செய்யத்தக்க நற்செயல்களைச் செய்து துணையாக இருந்து உதவுதல். ஆனால் கருமித்தனமாகிய குற்றத்தைக் களையாதவருதடைய செல்வம் பயனின்றி குறைந்து பின்பு அழிந்தும் விடும்.  இதுவே குறள் சொல்லும் கருத்து. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பது ஔவையார் வாக்குதான். நாலடியார் இக்கருத்தை அழகாக இவ்வாறு செல்வம் நிலையாமை என்னுமதிகாரத்தில் கூறுகிறது:
“உண்ணான் ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்
துன்னருங் கேளிர்துயர் களையான் – கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் ஆஅ
இழந்தா னென்றெண்ணப் படும்”
மேற்கண்ட வெண்பாவில் அஆ என்பது ஒரு சீராகக் கொள்ளப்படும், வெறும் “நிரை” என்றிராமல். அஆ, இஈ போன்றவை விட்டிசைக்கும் சீர்கள் என்பதை, “அஇ உஎ இவை குறிய மற்றைய” என்ற சூத்திரப்பாடல் குறிக்கிறது. நாலடியார் பாடலின் கருத்தும்
இன்றியமையாதஉணவுகளைஉண்ணாமலும், மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்துகொள்ளாமலும், நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும்இரப்பவர்க்குஉதவாமலும், ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக்கொண்டிருப்பானாயின், ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, கருதப்படுவான்.
கார்காலப்படலத்தில் வருகிற கம்பரின் இராமகாதைப்பாடலொன்று, “தகவிழந்து அழிவினன் பொருள் போகவாறொழுகலான் செல்வம் போன்றவே” என்று சொல்வது இதைத்தான்.
இன்றெனது குறள்:
பயனின்றி வீணே கருமியின் செல்வம்
செயத்தக்கச் செய்யா தெனின்
payaninRi vINE karumiyin selvam
seyaththakkach cheyya dhenin

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment