குறளின் குரல் – 447

9th July 2013

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
                            (குறள் 440: குற்றம் கடிதல் அதிகாரம்)

Transliteration:
kAdhala kAdhal aRiyAmai uykkiRpin
Edhila EdhilAr nUl
kAdhala – Among all things desired
kAdhal – those desires
aRiyAmai – concealing or hiding from others knowing
uykkiRpin – get those desirs fulfilled.
Edhila – Without getting the thought fufilled
EdhilAr nUl – the scheming of enemies
This verse is difficult to interpret. Most commentaries on this verse are confusing and without even understanding or even questioning the relevance of this verse in this chapter. The foremost of them, Parimelazhagar writes for the first line of this verse as this:  “If one is capable of enjoying what he loves without feeling or realizing that he loves as such”. There cannot be a more confusing statement like this. In Sanskrit lore, a phrase, “nishkAmya karma” is used to denote duty without attachment.  The luxuries accorded to a ruler are for the post and not for the individual.
A ruler must go through the luxuries accorded as water drop on the lilly leaf. Even if they are a bit excess based on individual desires, the enemies must never know that this ruler has such desires the same would be used as the weakness against the ruler, to penetrate his rule.  So, we may probably construe this verse to imply a ruler can fulfill the personal desires without exposing self to opponenents.
The sum of this verse implies, desire is not a fault, but letting enemies know such desires exist in a ruler is a fault and a ruler must be devoid of such faults. This is the general understanding and tone of other commentators too. But the ethics say otherwise – An individual must elevate to be without desires, especially a ruler.  After all, “as the ruler are the people”!  If the desires are not justified, there is no worse enemy to a ruler as well as to his citizens.
The research compendium of Ki.vA.jA cites from perungadhai, a line, “utKadhozhugin, pagaivar eNNam bayamila vennum nIdhpperumai nUl Odhiyum oRAi”, possibly implying a similar meaning. I had to write two verses for my own understanding of what the original verse probably intended to convey.
Even if the desires exist, if a ruler can enjoy them without exposing self
No enemies can penetrate such a rule by scheming and the act of bluff”
தமிழிலே:
காதல – தான் விழைந்தவைகளுள்
காதல் – அவ்விழைவுகளை
அறியாமை – பிறர் அறியாவண்ணம்
உய்க்கிற்பின் – நடத்திக்கொள்பவர்களிடம்
ஏதில – எண்ணம் நிறைவேறாது
ஏதிலார் நூல் – பகைவர்கள் செய்யும் சூழ்ச்சிகள்
இக்குறள் விளக்கம்கூறக் கடினமான குறள். உரையாசிரியர்கள் பொதுவாக, இது எவ்வாறு இவ்வதிகாரத்தில் பொருந்துகிறது என்று புரிந்துகொள்ளாமல் உரை எழுதியுள்ள குறள். பரிமேலழகர், முதல் வரிக்கு, “தான் காதலித்த பொருள்களை, அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின்” என்று கூறுகிறார். இது மிகவும் குழப்பமான விளக்கம். “நிஷ்காம்ய கர்மா” என்று வட நூலார் கூறுவது போல், ஒரு அரசனுக்கு உரிய அரச போகங்கள், அவனுடைய பதவியை ஒட்டியது, அரசன் என்கிற தனிமனிதனை அல்ல!
அரச பதவியின் போகங்களை தாமரை இலை மேல் நீரைப்போல பற்றற்று அனுபவிக்க வேண்டும். அப்படி பிறர்,  குறிப்பாக, இவன் போகங்களில் திளைக்கிறவன் என்று எண்ணாதபடி, அவற்றை பயன்படுத்துகிற அரசனுக்கு,  பகைவர்களின் சூழ்ச்சி செய்யும் எண்ணங்கள் நிறைவேறாதவையாகும்.  ஒரு ஆளுபவனுடைய இச்சைகளை அறிந்து கொண்ட பகைவர்கள் அவற்றையே தங்களது படைக்கலமாகப் பயன் படுத்திக்கொள்வர். ஆகையால் தம்முடைய இச்சைகளை நடத்திக்கொண்டாலும், அவற்றை பகைவர்கள் அறியாவண்ணம் செய்தலைத்தான் இக்குறள் குறிப்பதாக கொள்ளவேண்டும்.
விழைவே குற்றமில்லை, விழைவை எதிரிகள் அறிந்து கொள்ளும்படி துய்ப்பதே குற்றம், அக்குற்றத்தை களைந்தே ஆளுபவர்கள் ஆளவேண்டுக் என்று சொல்கிறாரா வள்ளுவர், மற்றவர்கள் உரையாசிரியர்களும் சொல்லுகிறபடி? ஆனால் நீதி நூல்களும், தனிமனிதருக்கு, குற்றமாகக் கருதக்கூடிய எவ்விழைவும் இருக்கக்கூடாது, குறிப்பாக ஆளுவோருக்கு நிச்சயமாக இருக்கக்கூடாது என்றல்லவோ கூறுகின்றன? ஏன், வள்ளுவரே கூட, அவ்வாறுதானே பிற அதிகாரங்களில் கூறுகிறார்? இல்லையெனின் அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்பதுபோல குடிகளும் அவ்வாறே இருக்க, வெளிப்பகை என்ற ஒன்று தேவையே இல்லை!
கீ.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பிலே, பெருங்கதையிலிருந்து கீழ்காணும் வரிகள் மேற்கோளாகக் காட்டுகிறார். “ உட்காதொழுகின் பகைவர் எண்ணம் பயமில் வென்னும் நீதிப்பெருமை நூல் ஓதியும் ஓராய்”. இவை ஒரு ஆள்பவரைப்பார்த்து இடித்துரைகும் வீச்சிலிருப்பதை புரிந்துகொள்ளலாம். இதைத்தான் வள்ளுவரும் சொன்னதாகக் கொள்ளலாமா?
இன்றெனது குறள்:
விழைதல் விழைவறியா துய்க்கின் பகைவர்
நுழைந்தழிக்க எண்ணுதல் வீண்
vizhaidhal vizhaivaRiya thuykkin pagaivar
nuzhaindhazhikka eNNudhal vIN.
விழைவெனும் குற்றம் பகையறியா தாண்டால்
நுழையும் பகையிலாள் வோர்க்கு
vizhaivenum kuRRam pagaiyaRiyA dhAnDAl
nuzhiyum pagaiyilAL vOrkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment