குறளின் குரல் – 553

23rd Oct 2013

வேலன்று வென்றி தருவது மன்னவன் 
கோலதூஉங் கோடா தெனின்.
                                  (குறள் 546: செங்கோன்மை அதிகாரம்)

Transliteration:
vElanRu venRi tharuvadu mannavan
kOladUung kODa denin

vElanRu – Weapons that help win enemies or keep citizens under control are not
venRi tharuvadu – the ones that give true victory
mannavan – for the ruler
kOl – his scepter
adUung – that too
kODadenin – when does not bend as the situation demands and is always just.

The real victory for a ruler is not the one over enemies or keeping the citizen under thumb with might of weapons; it is the just rule rendered with unbent scepter that is considered real victory. An interesting usage in this verse is, “adUung” which adds an interesting dramatic element to the verse. “This is given by that, that too if it is like this” is something that we use in normal conversations, that vaLLuvar has aptly used here.

“Scepter, that too unbent and just is the true gear
Of any victory over feared enemies, not the spear”

தமிழிலே:
வேலன்று – பகைவரை கொல்லும், குடிகளை பயத்தில் வைக்கும் ஆயுதம் அல்ல (வாள், வேல்)
வென்றி தருவது – வெற்றியைப் பெற்றுத் தருவது ஆள்வோர்க்கு
மன்னவன் – அரசன் அல்லது ஆள்பவனுடைய
கோல் – செங்கோலே நிலைத்திருக்கும் வெற்றியைத் தருவது.
அதூஉங் – அதுவும் கூட
கோடாதெனின் – அக்கோல் வளயாது நீதியைக் காக்கும் செங்கோலாயின்.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவருக்கு வெற்றியென்று சொல்லப்படுவது அவருடைய படைவலியால் அவர் எவ்வாறு பகைவர்களை வீழ்த்தினார், அல்லது குடிகளை தமக்குக் கீழே பயத்துடன் வாழச் செய்தார் என்பதில் இல்லை. அவருக்கு உண்மையான வெற்றியைத் தரக்கூடியது அவரது செங்கோல்தான். அதுவும் வளையாது, நீதியைக் காக்குமாயின். இக்குறளில் ஒரு கவனிக்கத்தக்க சொல், “அதூஉங்” என்பதுதான். பேச்சு வழக்கில் இருப்பது போல், “இதைத் தருவது இதுதான், அதுவும் இப்படி இருக்குமானால்” என்பதில் ஒரு நாடக வசனத்தன்மை இருப்பது இரசிக்கத்தக்கது.

இன்றெனது குறள்:

கோணாத கோலாலே கொள்வதே வெற்றிவேலும்
காணாது வெற்றியது போல்

kONAda kOlAlE koLvadE vERRivElum
kANAdu veRRiyadu pOl

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment