குறளின் குரல் – 556

26th Oct 2013

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் 
வடுவன்று வேந்தன் தொழில்.
                                 (குறள் 549: செங்கோன்மை அதிகாரம்)

Transliteration:
kuDipuRang kAthOmbik kuRRam kaDidal
vaDuvanRu vEndan thozhil

kuDi puRam – citizens from external disturbances
kAth(u) Ombik – protecting and caring for them well
kuRRam kaDidal – when citizens commit mistakes, punishing them (for correcting)
vaDu anRu – are not shameful
vEndan thozhil – they are defined duties of a king

Among the defined duties of a ruler, both protecting, caring for citizens as well as when they commit crime, punishing them accordingly are appropriate. A ruler cannot be blamed for his act of punishing, with an argument, why then he must protect such citizens from external enemies! A mother has the right to care as well as reprimand her child and a ruler is like a mother.

In Kamba rAmAyaNam, kambar says, “To take care of citizens with love, and when they commit mistakes that affect others, punishing them appropriately are both duties of a king as he is like a mother to his citizens”. A s said earlier, a mother has both duties and responsibilities to take care and set right her child. The underlining thought of punishing, when a citizen commits a crime is also expressed in other kuraL verses (550, 561, and 567).

Protecting citizens from outside enemies, but punishing them for crime
Are both defined duties of a king and not considered shameful, to blame 

தமிழில்:
குடி புறம் – தம் நாட்டு மக்களை வெளியோர்
காத்(து) ஓம்பிக் – நலிவுறச் செய்யாது காப்பாற்றுதலும், அவர்களை பேணுதல்
குற்றம் கடிதல் – அதேபோல் தம்மக்கள் குற்றம் செய்யும்போது அவர்களை ஒறுத்தலும்
வடுவன்று – அரசனுக்கு இழுக்கைத் தருவதில்லை
வேந்தன் தொழில் – அது அவருடைய பதவிக்கான அறம் (காப்பது போல் தண்டித்தலும்)

ஆளுவோருக்கு விதிக்கப்பட்டக் கடமைகளில், மக்களை வெளிப்பகையிடமிருந்து காப்பாற்றி, அவர்களைப் பேணுதலும், அதேசமயம் தம் குடிமக்கள் குற்றம்செய்யும் போது, அவர்களை அதற்காக தண்டித்தல் ஆகிய இரண்டுமே உண்டு. பிறரிடமிருந்து காப்பாற்றி, தாம் மட்டும் தண்டிப்பதில் என்ன நீதி என்று அதில் குறை காணமுடியாது. 

கம்பராமாயணக் கிட்கிந்தா காண்டப்பாடலில் கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

நாயகன் அல்லன்; நம்மை நனிபயந்து எடுத்து நல்கும்
தாய்” என, இனிதுபேணி, தாங்குதி தாங்குவாரை;
ஆயது தன்மையேனும், அறவரம்பு இகவாவண்ணம்,
தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.

குடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில் எவரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு ஏற்ற முறையாகும் என்பது இப்பாடல் சொல்லுவது. ‘கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்’, ‘தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால், ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து‘, ‘கடுமொழியும் கையிகந்ததண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்‘ (குறள் 550, 561, 567) என்னும் குறளிகளிலும், இக்கருத்தினையே வள்ளுவர் கூறுகிறார். அரசனைத் தாய் என்று சொல்லி, கம்பர் குழந்தையைக் காப்பதுபோல், தண்டித்தலும் தாயின் கடமையே அன்றி தவறல்ல என்று சொல்லுகிறார்.

இன்றெனது குறள்:

மக்களைக் காத்தவர்தம் குற்றத்தை வட்டித்தல்
தக்கதேவேந் தற்குகுற்ற மில்

makkaLaik kAththavartham kuRRaththai vaTTiththal
thakkadEvEn daRkukuRRa mil

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment