குறளின் குரல் – 557

27th Oct 2013

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர்.
                               (குறள் 550: செங்கோன்மை அதிகாரம்)

Transliteration:
kolaiyiR koDiyArai vEndoRuththal painkUzh
kaLaikaT TadanoDu nEr

kolaiyiR – By giving capital punishment of dealth penalty
koDiyArai – utterly despicable criminals
vEnd(u) oRuththal – a ruler killing such criminal by punishment
painkUzh – to help young crop (saving) grow
kaLai kaTTadanoDu – by removing weeds
nEr – equal to such service

By giving capital punishment of death to criminals such as people that indulge in arson, killing others by poison, killing people with deadly weapons, theieves, robbers, that who go after other man’s wife –is appropriate for a ruler to do. This is like removing weeds to save the young crop and helping it to grow.

With this verse, which is ane extension of previous verse, vaLLuvar completes this chapter. In the days of serious arguments and considerations to abolish capital punishment, vaLLuvar has prescribed this as a valid code of ruling for rulers. The example of weeding is very aptly used to insist on his argument. The argument of keeping the criminals in maximum security prison and trying to mend them is a wasted effort. It is like removing the weed and growing them in a separate land, acknowledging their right to grow.

“A ruler killing the worst criminals by capital punishment
Is like weeding to save the young crop for its nourishment”

தமிழிலே:
கொலையிற் – கொலைத்தண்டனை விதித்து
கொடியாரை – கொடிய பாதகங்கள் செய்தவரை
வேந்து ஒறுத்தல் – ஒரு அரசன் தண்டித்தல் என்பது
பைங்கூழ் – இளம்பயிரை
களை கட்டதனொடு – களையைக் களைந்து காப்பாற்றுதலுக்கு
நேர் – ஒப்பாகும்

பஞ்சமா பாதகங்களை செய்வோர், தீக்கொளுத்தி நாசம் செய்வோர், நஞ்சிட்டு கொல்வோர், கொலைக் கருவிகளால் கொல்வோர், திருடுவோர், வழிப்பறிப்போர், சூறையாடுவோர், பிறனில் விழைவோர் ஆகிய பொல்லாக் கொடியோரை, மரணதண்டனை விதித்துக் கொல்லுவித்தல் மன்னர்க்கு ஏற்புடையதே. இது, விவசாயி களையெடுத்து இளம்பயிரைக் காப்பாற்றுதல்போல, நல்லோரைக் காக்க வேந்தற்கு விதிக்கப்பட்ட அறமாம்.

கம்பரின் கிட்கிந்தாகாண்டப் பாடல் இதை அழகாகக் கூறுகிறது,

“நன்றி கொன்றரு நட்பினை நார் அறுத்
தொன்று மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்.

இக்குறள் சென்ற குறளின் நீட்சியாக, குற்றம் புரிந்தோரை, மரணதண்டனை விதித்துக் கொல்லுதலும் செங்கோன்மையின் இலக்கணமாகக் கூறுகிறது. இவ்வாறு சொல்லி,இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர். மரணதண்டனை அநாகரீகச் செயலென்று வாதங்களும், தீர்மானங்களும் செய்யப்பட்டு, பல நாடுகளில் நீக்கவும் செய்யப்பட்டிருக்கிற காலகட்டத்தில், இதில் களையெடுத்தல் என்னும் எடுத்துக்காட்டினால் அதன் அவசியத்தை தெளிவாக உணர்த்திவிட்டார் வள்ளுவர்.

ஊழல் என்பது மெதுவாக ஊடுருவி பல நாடுகளின் அறவாழ்வையே குலைத்திருப்பதைப் பார்க்கிறோம். களையெடுக்காவிட்டால் பயிர் பாழாகும் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்வதே. களையை நீக்கி, களையை பயிரிலிருந்து தனியாக வளர்ப்போம் என்பது எவ்வாறு பொருந்தாதோ, அதைப் போன்றதே பொல்லாக் கொடியோரை மரணதண்டனை இல்லாமல், கடுங்காவல் சிறையில் வைப்பதும்.

இன்றெனது குறள்:

பயிர்காக்க நீக்கும் களையினைப்போல் வேந்தர்
உயிர்நீக்கும் பொல்லார்க் கொறுத்து (பொல்லார்க்கு ஒறுத்து)

payiRkAkka nIkkum kaLayinaippOl vEndar
uyirknIkkum pollArk koRuththu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment