குறளின் குரல் – 573

12th Nov 2013

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் 
நீடின்றி ஆங்கே கெடும்.
                        (குறள் 566: வெருவந்த செய்யாமை அதிகாரம்)

கடுஞ்சொல்லன் – பிறர் அஞ்சும்படியாக கடுஞ்சொற்களைக் கூறுவதோடு (ஆளுவோன்)
கண்ணிலன் ஆயின் – கண்ணோட்டம், பிறரிடம் நயப்பில்லாதவனாகவும் இருந்தால்
நெடுஞ்செல்வம் – அவனுக்குத் முன்னோர்கள் வழியே தொடர்ந்து வரும் செல்வமெல்லாம்
நீடின்றி – நீண்டநாள் அவனிடம் தங்கியிராமல்
ஆங்கே கெடும் – அப்போதே தொலைந்து அழியும்

இக்குறள் சென்ற குறளிலிருந்து சற்று மாறுபட்டது. கடுமுகத்தனாக இருப்பதே தவறு; கடுஞ்சொலனாக இருப்பது அதனினும் தவறு. கண்ணோட்டமாகிய அருள் நோக்கில்லாமல் இருப்பதும் தவறு. ஆக இவ்விரண்டும் ஆள்வோரிடம் இருக்குமாயின், அவருக்கு தொன்றுதொட்டு வருகின்ற செல்வம், நீண்ட நாட்கள் நிலைக்காமல், தொலைந்து அழிந்துவிடும். இதுவே இக்குறள் தரும் கருத்து.

கடுஞ்சொல்லும், அருள் நோக்கிலாமையும் அஞ்சத்தக்கனவாம் ஆளப்படுபவர்களுக்கு. அவற்றை ஆளுவோர் தவிர்க்காவிடில் ஏது விளையும் என்பதை இக்குறள் சுட்டுகிறது. இவ்வதிகாரத்தின் மற்ற குறள்களில் சொல்லப்பட்ட கருத்தோடு ஒத்ததுதான் இக்குறளும்.

Transliteration:
kaDunjchollan – being a ruler of fearsome words
kaNNilan Ayin – and also a person unkind to subjects
neDunjchelvam – the wealth passed on to him from ancestors
nIDinRi – without longevity
AngE keDum – will perish rightaway

This verse is slightly different from the previous one. To show a fearful face it self is wrong. To be harsh worded is ever more wrong. Along with that being unkind is definitely wrong. So, if a person is both harsh worded and unkind, all wealth from posterity to present will switftly fade away and be lost permanently – is the thought expressed in this verse.

This verse clearly tells what will happen to rulers that don’t avoid harsh words and and unkind nature towards subjects. Not very different from other verses.

“Ruler of harsh speak and unkind nature will lose it all,
wealth passed on from past without longevity to his fall”

இன்றெனது குறள்:

தொன்றுதொட்ட ஆக்கம் தொலைந்து அழியுமே
வன்சொலோடு நன்நயப்பி லார்க்கு

thonRuthoTTa Akkam tholaindhu azhiyumE
vansolODu nannayappi lArkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment