குறளின் குரல் – 576

15th Nov 2013

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் 
வெருவந்து வெய்து கெடும்.
                          (குறள் 569: வெருவந்த செய்யாமை அதிகாரம்)

செரு வந்த போழ்திற் – பகை வந்தபோதில்
சிறைசெய்யா – அது வருமென்று முன்பே அறிந்து அரண் செய்து கொள்ளாது
வேந்தன் – ஆள்பவன்
வெருவந்து – அச்சங்கொண்டு (அப்பகை தன் வாயிலில் வந்து சேரும் போது)
வெய்து – துன்புற்று
கெடும் – அழிந்துவிடும்.

பொச்சாவாமை அதிகாரத்தில் இதே போன்று மறதியின்மையின் தேவையை வலியுறுத்தி ஒரு குறள். “முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னூ றிரங்கி விடும்”. அக்குறளின் பொதுத்தன்மையும் இக்குறளைப் போன்றே உள்ளது. குற்றங்கடிதல் அதிகாரத்தில், “வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறுப் போலக் கெடும்” என்று பரவலாக அறியப்பட்ட ஒரு குறளும் இதேபோன்ற பொருளில்தான்.

போர் வருவதற்கு முன்பு தன்னைக் காத்துக்கொள்ள தனக்கு அரண் செய்து கொள்ளாது ஆள்பவன், அப்பகை வரும்போது அச்சங்கொண்டு துன்புற்று அழிந்துவிடும் என்பதே இக்குறளின் பொருள்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற முதுமொழி எல்லோரும் அறிந்ததுதான். இக்குறளும், பொச்சாவாமை, குற்றங்கடிதல் அதிகாரங்களில் சொல்லப்பட்டக் குறளும், “முற்பகல் செய்யாவிட்டால் பிற்பகல் விளயும்” என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளன.

Transliteration:
Seru vanda pOzhdiR siRaiseyyA vEndan 
veruvandu veydu keDum

Seruvanda pOzhdiR – when the enemies wage war against him
siRaiseyyA – not building a protecting fortress earlier to safeguard
vEndan – the ruler
veruvandu – will be fearful (when the enemies wage the war)
veydu – and suffer in the hands of enemies
keDum – to perish

Earlier we have seen two verses in the chapters of “Avodiing faults” and “Not being forgetful”, with similar meaning but in differen contexts. The general meaning in both cases was: “if not taking preventive action for some fault earlier, one would have to repent for that later”. This verse also expresses similarly.

“A ruler, who does not protect himself and his subjects, building a strong fortress for them, will have no option but to be fearful and suffer in the hands of his enemies. The essence of this verse is slightly different from previous verses. Apart from not doing what would be fearful to others, a ruler must not do anything that he would have to pay for, by being fearful.

A proverb in Tamil says, “The harm done earlier, will have its repurcussions later”. This verse and the two verse cited here probably indicate that this adage must be altered to say, “What is not done properly earlier, will have its repurcussions later”.

“A king with no protecting fence
Will be fearful and perish hence”

இன்றெனது குறள்:

போர்வருமுன் தற்காவா தாள்மன்னர் அஞ்சிபின்னர்
சீர்குலைந்து துன்புறு வார்

poRvarumun thaRkAvA thALmannar anjipinnar
sIrkulandu thunbuRu vAr

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment