குறளின் குரல் – 582

21st Nov 2013

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
                               (குறள் 575: கண்ணோட்டம் அதிகாரம்)

கண்ணிற்கு – ஒருவரின் கண்களுக்கு (குறிப்பாக ஆள்வோரின்)
அணிகலம் – அழகைத்தரும் பூணணிகள்
கண்ணோட்டம் – அருள் நோக்குடன் இருப்பதுதான்
அஃதின்றேல் – அத்தகைய அருள் நோக்கு இல்லையானால்
புண்ணென்று – அக்கண்கள் இருக்குமிடம் புண்கள் புரையோடியவையாக
உணரப்படும் – அறியப்படும்

அருட்பார்வையோடு கூடிய கண்களைக் கொண்டிருப்பதே ஆளுவோருக்கு அழகினைத்தரும் பூணும் அணிமணிகள் போன்றதாம். மற்றவை கண்களென்று அறியப்படமாட்டா. அவை வெறும் புண்களென்றே அறியப்படும். கண்களைப் புண்களாகச் சொன்ன மற்றொருகுறளை சென்ற குறளிலும் பார்த்தோம். “கண்ணுடையோர் என்போர் கற்றோர், முகத்திரண்டு புண் உடையார் கல்லாதவர்” என்ற குறளில் வரும் கண்-புண் என்னும் எதுகைச் சொற்களை இங்கு கண்ணோட்டத்திற்காகப் பயனாக்கியுள்ளார். இதையொட்டியே பரிமேலழகர் உரை, “கண்ணோட்டமின்மையை” அறிவுடையார் புண்ணென உணருவர் என்கிறார்

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்” என்றே திரிகடுகமும் கூறுகிறது. சிறுபஞ்சமூலமும், “கண்வனப்பு கண்ணோட்டம்” என்கிறது.

Transliteration:

kaNNiR kaNigalam kaNNOTTam ahdinrEl
puNNenRu uNarap paDum

kaNNiRku – To the eyes
aNigalam – ornaments that one wear are
kaNNOTTam – being benign
ahdinrEl – If it is not there
puNNenRu – as sores
uNarappaDum – they would be known

Compassionate and caring eyes are like ornaments for the eyes for a ruler. Lacking that, they would be known as sores just filling the place of eyes. In the last verse, we saw a verse which also used eyes and sores to show who is learned and who is not.

ThirikaDugam, a sangam work on eithics uses the same phrase. SirupanchamUlam another work on ethics also says the beauty of eyes is in its kindly looks.

“Ornament to eyes is in their compassionate stance
Without that, they are just sores lacking in glance”

இன்றெனது குறள்:

அருட்பார்வை கண்களே பூணணியாம் புண்கள்
உருவில் புரையாம் பிற

aruTpArvai kaNgaLE pUNANiyAm puNgaL
uryvil puraiyAm piRa

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment