குறளின் குரல் – 583

22nd Nov 2013

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.

                             (குறள் 576: கண்ணோட்டம் அதிகாரம்)

மண்ணோடு இயைந்த – மண் சுதை கொண்டு செய்த அல்லது மண்ணிலே பொருந்தி இயக்கமில்லாத
மரத்தனையர் – மரப்பாவையினைப் போன்றவர் (உணர்விலாதவர்) அல்லது மரத்தினை போன்றவர்
கண்ணோடு – கண்களோடு கூடி
இயைந்து – இணந்து இருக்கக்வேண்டியதான
கண்ணோடாதவர் – அருளென்னும் இயக்கமில்லாத பார்வையினர்

இக்குறள் உரையாசிரியர்களுக்கு பல கற்பனைகளை வழங்கியிருக்கிறது. பரிமேலழகர் இயக்கமில்லாது மரம் மண்ணில் நிலைபெற்று இருத்தலை ஒக்கும், அருளோடு கூடி இயங்காத கண்கள், அவை முகத்தில் நிலைபெற்று இருந்தாலும் என்கிறார். மணக்குடவர் இவ்வியக்கமிலாமையை மண்சுதை கொண்டு செய்யப்பட்ட மரப்பாவையை ஒக்கும் என்கிறார். பரிதியார் மண்ணோடு இயந்த சித்திரத்தில் எழுதிப்பழுத்த மாமரத்துக்கு நிகராவன் கிருபைக்கண் இல்லாத அரசன் என்பார்.

கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும்” என்ற சிலப்பதிகாரவரிகளுக்கு அடியார் நல்லார் உரையில், சுதையால் பாவையுள்ளிட்டன பண்ணுவார் என்று “மண்ணீட்டாளருக்குப்” பொருள் வகுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இக்குறள் சொல்லுவது இதைத்தான். அருட்பார்வை என்னும் இயக்கமில்லாத கண்களை உடையவர்கள் (ஆளுவோருக்குக் குறிப்பாகச் சொல்லப்பட்டது), இயக்கமில்லாத கண்களை உடைய மரப்பாவை அல்லது, மண்ணிலே இருந்து இயங்கமுடியாத மரத்தினை ஒக்கும்.

Transliteration:

maNNO Diyaindha maraththanaiyar kaNNO
DiyaindhukaN NODA davar

maNNOD(u) iyaindha – made of mud or that which is fixed to land without movement
maraththanaiyar – a wooden toy (lack of movement is implied) or a tree
kaNNOD(u) – For eyes
iyaindhu – that befits the existence of eyes
kaNNODAdavar – when such benign look is not there.

This verse has spawned varied imagination in most commentators. Parimelazhagar says unkindly eyes that have no compassionate move oe graceful glance towards needy are like trees which are fixd on earth without movement. MaNakkuDavar says, such eyes are like wooden toys (implied meaning of stationary fixture) made of mud clay. Paridhiyar goes to the extent of depicting this as a fruit tree with fruits only in the picture without any real use.

The reference of MaNakkuDavar comes from SilappadikAram lines, “kaNNuL vinainjarum maNNITTALarum”, where it referes to clay pot workers. Regardless of what interpretation works, rulers of compassionless eyes are like wooden toys, without any movement. Such eyes just exist without any use.

“Unkindly eyes of a ruler are like a toy of made of clay
Without any movement just in place, a useless stay”

இன்றெனது குறள்:

அருளற்ற பார்வைகொண்டோர் மண்கொண்டு செய்த
ஒருமரப் பாவையொப் பர்

aruLARRa pArvaikoNDOr maNkONDu seidha
orumarap pAvaiyop par

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment