குறளின் குரல் – 728

17th Apr 2014

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 
கற்ற செலச்சொல்லு வார்.
                               (குறள் 722: அவை அஞ்சாமை அதிகாரம்)

கற்றாருள் – கல்வியை கற்றவர்களுள்ளும்
கற்றார் எனப்படுவர் – மேலாக கற்றோர் என்று மதிக்கப்படுபவர்
கற்றார்முன் – கற்றோர்கள் நிறைந்த அவையின்முன்
கற்ற – தாம் கற்றவற்றை
செலச் சொல்லுவார் – மற்றவர்கள் முற்றும் அறிய, தெளிவடைய, உள்ளம் பதியச் அஞ்சாமல் சொல்லுவார்.

கற்றோர் என்று அறியப்படுபவர்கள் எல்லோருள்ளும் மேலானவர் என்று ஒருவர் எவ்வாறு அறியப்படுகிறார்? கற்றோர்கள் நிறைந்த அவையில் தாம் கற்றவற்றை, அஞ்சாது, அவர்கள் அறிய, தெளிவடைய, அவர்கள் உள்ளத்தில் பதியுமாறு யார் சொல்ல வல்லவர்களோ, அவர்களேதான் அவ்வாறு அறியப்படுவர். அவை அஞ்சாமை பற்றி இக்குறள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், கற்றோர் நிறைந்த அவையில் கற்றவராகவே இருந்தாலும், கருத்துக்களை வெளிப்படுத்தை துணிவும், பயமின்மையும் ஒருவருக்குத் தேவை என்பது உணர்த்துகிறது..

Transliteration:

kaRRAruL kaRRAr enappaDuvar kaRRArmun
kaRRa selachchollu vAr

kaRRAruL – Even among the learned
kaRRAr enappaDuvar – a learned man will be placed high (when)
kaRRArmun – Among the assembly of learned
kaRRa – the learnings of a person
selach cholluvAr – to exhibit before others for them to know clearly, to understand, fearlessly.

When would a learned person be place high among other scholars? When that person is able to communicate his learnings before the assembly of scholars, fearlessly, clearly and in ways for them to comprehend completely.

Though this verse does not say about “fearlessness” explicitly, it is implied that to speak before the learned assembly one must have enormous amount of courage and conviction.

“To be placed high and valued among other scholars a, learned
must speak clearly, convincingly, and fearlessly before his herd”

இன்றெனது குறள்:

கற்றதை கற்றோர்முன் முற்றறியக் கூறுவோரே
கற்றோரில் கற்றோரா வர்

kaRRadhai kaRROrmun muRRaRiya kURuvOrE
kaRROril kaRRIrA var

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment