குறளின் குரல் – 780

8th Jun 2014

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்.
                          (குறள் 774: படைச்செருக்கு அதிகாரம்)

கைவேல் – தன் கையிலுள்ள வேலினை
களிற்றொடு – தன்னை எதிர்நோக்கி வரும் யானையினைக்
போக்கி – கொல்ல எறிந்துபின்னர்
வருபவன் – தம்மீது வரும் மற்றொரு யானையின் ( மீது எறிய )
மெய்வேல் – தன்னுடைய உடம்பில் பாய்ந்த எதிரியின் வேலை
பறியா – பறித்து எறிவதற்கு
நகும் – மகிழ்வான் (பெருமை மிக்க வீரன்)

தம்மீது பாய்ந்து வரும் யானையின்மேல் தம் கையிலுள்ள வேலை எறிந்துபின்னர், வரும் மற்றொரு யானையின்மீது எறிய மற்றொரு வேலை தேடி, தன் உடலில் பாய்ந்த எதிரியின் வேலைப் பறித்து எறிவதை மகிழ்வுடன் செய்வான், பெருமைமிக்க வீரன் என்று சொல்லி வீரர்க்கு பெருமை தரத்தக்கச் செயலைச் சொல்லுகிறது இக்குறள்.

Transliteration:

kaivEl kaLiRRoDu pOkki varubavan
meivEl paRiyA nagum

kaivEl – the spear that he wields in his hand
kaLiRRoDu – the elephant that comes charging
pOkki – after throwing to kill that elephant
varubavan – to kill another elephant that comes charging
meivEl – the spear that has pierced his body
paRiyA – plucking, pulling it away 
nagum – gladly

After killing the elephant that came charging with the spear in his hand, to kill another charging elephant, a valiant soldier, would gladly pluck and pull the spear of enemy that has pierced his own body, glady. Such is the glory of a true valiant. This verse is about what brings pride to a valiant soldier.

“After killing a charging elephant, to kill another, a warrior of pride
would pull the spear pierced in his body gladly, to charge in stride”

இன்றெனது குறள்:

களிறெறிய வேலெறிந்தோன் மற்றொன்றைக் கொல்ல
களிப்புடன்மெய் தைத்தவேலெய் யும்

kaLiReRiya vEleRindOn maRRonRaik kola
kaLippuDanmei thaiththavElei yum

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment