குறளின் குரல் – 781

9th Jun 2014

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் 
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.
                               (குறள் 775: படைச்செருக்கு அதிகாரம்)

விழித்தகண் – பகைவரைக் கண்டு சினக்கும் கண்கள்
வேல் கொணடு எறிய – தம்மை எதிர்நோக்கி வரும் எதிரியின் வேல் கண்டு
அழித்து இமைப்பின் – ஒருகணம் சிமிட்டினாலும், (இமைத்தால்)
ஒட்டு அன்றோ – அது எதிரியின் வேலுக்கு தோற்று ஓடியதற்கு இணையன்றோ?
வன்கணவர்க்கு – படைசிறந்த வீரர்க்கு.

மீண்டும் ஒரு படையில் பொருந்திய வீரர்க்குப் பெருமை சேர்ப்பது எது என்பதை சொல்லும் குறள். பகையைக் கண்டு கோபத்தில் கண் சிவந்த வீரனுடைய கண்கள், எதிரியின் கையிலிருந்து புறப்பட்ட வேல் தம்மை நோக்கி வரும்போது, ஒருகணம் அனிச்சையாகச் சிமிட்டினாலும், அது வீரரைச் சாய்த்து தோல்வியைத் தருவதன்றோ, என்ற கேள்வியின்மூலமாக வீரர்க்கு அஞ்சாமையே பெருமையே என்பதைச் சொல்லும் குறள்.

பாய்ந்துவரும் எதிரியின் படைக்கருவிக்கு கண்சிமிட்டி இமையாமையைச் சொல்லும் இலக்கியப்பாடல்கள் இதோ!

“எடுத்தெறி ஞாட்பின் இமையான்,,” (புறநானூறு : 290). ஞாட்பு – போர்க்களம், போர்
“வேலும் கணையமும் வீழினும் இமையார் வீரியத் தறுகணர்” (பெருங்கதை – 1.46) (தணையம் – தண்டாயுதம்)
“வீரரெறி வெம்படைகள் வீழயிமை யானாய்” (சீவக சிந்தாமணி: 288)

Translitertion:

vizhiththakaN vElkoN DeRiya azhiththimaippin
OTTanRO vanka Navarkku?

Vizhiththa kaN – the angered eyes while facing enemies
vEl koNDu eRiya – looking at the spear from enemies hands
azhithth(u) imaippin – if they (eyes) forsake their stance, by blinking
OTT(u) anRO – is it not equivalent to running out of fear?
vankaNavarkku? – for valiant soldiers?

This verse also implies what brings greatness, eminence to soldiers. When the spear an enemy charges towards, the otherwise angered eyes at the sight of enemy, of a valiant soldier, if blinks then doesn’t it amount to running out of fear, accepting defeat? – asks this verse. The implied meaning of this question to say fearlessness is what brings glory to warriors.

Again, many a references to unblinking valor in literary works such as puRanAnURu, perungkadai, and chIvaga chintAmaNi.

“is it not running in defeat for a valiant warrior, even for a second
if he blinks his eyes, at the charging spear of an enemy’s band?

இன்றெனது குறள்:

பாய்ந்துவரும் வேலுக்குக் கோபக்கண் மூடினாலும்
சாய்ந்தார்போல் அன்றோவீ ரர்க்கு?

pAinduvarum vElukkuk kOpakkaN mUDinAlum
sAindArpOl anROvI rarkku?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment