குறளின் குரல் – 852

19th Aug 2014

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
                        (குறள் 846: புல்லறிவாண்மை அதிகாரம்)

அற்றம் – உண்மையை (உடல் மானத்தை சுட்டும் உள்ளுறுப்புகள் என்பர் பரிமேலழகர் பிற உரையாசிரியர்கள்)
மறைத்தலோ – மறைக்க முயலுவது
புல்லறிவு – அறிவீனம்
தம்வயின் – தம்மிடம் உள்ள
குற்றம் – குற்றங்களை
மறையா வழி – நீக்குதற்கு உரிய வழியினில் செலாதவர்க்கு

தம்மிடம் உள்ள குற்றங்களை நீங்குதற்கு வழிதேடாமல், உண்மைகளை மூடி மறைக்க முயலுவது ஒருவர்க்கு அறிவீனம் ஆகும். இதுவே வள்ளுவர் சொல்லும் கருத்தாக இருக்கமுடியும்.

அற்றம் என்பதை மறைக்கப்படவேண்டிய உடல் உள்ளுருப்புகள் என்று பொருள் செய்து பெரும்பாலான உரையாசிரியர்கள், தம்முடைய குற்றங்களை உணர்ந்து போக்காதவர்கள், ஆடையால் தம்முடலை மறைக்க நினப்பதும் அறிவீனமே என்று கூறுகின்றனர்.

உடலை மறைப்பதால் மானம் காக்கப்படும், அதுபோல குற்றங்களை நீக்கினால் மானம் காக்கப்படும். குற்றங்களினால் மானம் போன பின்பு, ஆடையினால் மானம் போனால் என்ன என்கிற அளவில் உரைகள் சொல்லுகின்றன.

அறிவுடைமை அதிகாரத்தில் (குறள் எண் 421), “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
 உள்ளழிக்க லாகா அரண்” அறிவை அற்றம் காக்கும் கருவி என்றார் வள்ளுவர். அற்றம் என்பதை அழிவு என்று பொருள் செய்யப்பட்டது. இப்போது எண்ணுங்கால், அறிவு என்பது உண்மையைக் காக்கும் கருவி என்றும் பொருள் செய்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

அற்றம் என்ற சொல், அழிவு, முடிவு (அந்தம், அத்தம்), உண்மை என்று ஒன்றோடொன்று தொடர்புடைய பலபொருள்களில் வரும். ஆனால் உடல் மானத்தைக் காக்க மறைக்கப்படவேண்டிய உள்ளுறுப்புகள் என்று அகராதிகளில் சொல்லப்படவில்லை. உரையாசிரியர்கள் பலரும் பரிமேலழகர் வழி நின்று, அவர் கூற்றாம் “ஆடையால் அற்றம் மறைத்தாராதல்” என்பதையொட்டி, பொருள் செய்துள்ளனர். பரிமேலழகர் வழி நின்று பொருள் செய்தாலும், ஓர் ஆடையால் உண்மையை மறைப்பது என்பதே சரியாக இருக்கிறது.

குற்றம் மறைப்பது, அவற்றை இல்லையென்று ஆக்கும் முயற்சி, அதாவது தம்மிடம் உள்ள குற்றங்களை நீக்கும் உயரிய முயற்சி. அதைச் செய்யாது விடுத்து, தாழ்வான முயற்சியான, வெறும் புற அழகு சேர்க்கும் ஆடையினால் உடலை மறைத்து, தம்மை ஒழுக்கமுள்ளவராகக் காட்டிக்கொள்வதை நகையாடுகிறார் வள்ளுவர் என்பது சரியாகத் தோன்றுகிறது. இதிலும் கூட உடலுறுப்புகளை என்று சொல்லாமல், வெறும் புற அழகை மிகைப்படுத்துதலைக் கூறுவதாகவே எண்ண வேண்டியுள்ளது.

Transliteration:

aRRam maRaiththalO pullaRivu thamvayin
kuRRam maRaiyA vazhi

aRRam – Truth (other commentators refer to this as private parts of a person)
maRaiththalO – trying to hide
pullaRivu – is ignorance
thamvayin – self ridden
kuRRam – blemishes, faults
maRaiyA vazhi – not looking at the ways to get rid of them (faults)

It is ignorance to hide truth instead of trying to correct faults – This must be what vaLLuvar says through this verse instead of the interpretations by other commentators.

Most of them, interpret the word “aRRam” as “the private parts of a body” and say, it is ignorance to hide the body with dress for those who don’t try to be devoid of faults”. By covering the body, honor is saved. Likewise, devoid of faults also, honor is saved. After honor is lost due to faults, how worse is losing the honor again by not covering with clothes?

In the chapter of “Being Wise” (verse 421), the word “aRRam” was interpreted as “destruction”. Perhaps it should have been interpreted as truth. After all wisdom protects truth. Lexicons do not have the meaning of “private parts” for the word “aRRam”. Since ParimElazhagar says, “ covering aRRam with clothes”, others have interpreted as body. It should be trying to hide truth with clothes.

To hide faults is to rectify the faults – an attempt to be devoid of them and be elevated. Not doing that is a lowly effort of dressing up for external look to show off as if a person is of good conduct. This is what is probably suggested by vaLLuvar.

It is but ignorance that tries to hide truth
Without being devoid of faults uncouth

இன்றெனது குறள்:

தங்குற்றம் நீக்காது உண்மை மறைத்தலை
மங்குமறி வீனமென்று காண்

thankuRRam nIkkAdu uNmai maRaiththalai
mangumaRi vInamenRu kAN

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment