குறளின் குரல் – 853

20th Aug 2014

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
                       (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)

அரு மறை – அரிய வாழ்வியல் செய்திகளைக் கூறும் நீதி நூல்களைச்
சோரும் – கடைபிடிக்காது தவறும்
அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்
செய்யும் – செய்து கொள்வர்
பெரு மிறை – பெரிய துன்பத்தை
தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)

அறிவிலிகள் தாமே தமக்கு பெரிய துன்பத்தினை செய்துகொள்வர், நல்ல நீதிகளைக் கூறும் நூல்வழிபடி நடவாது அவற்றைத் தவற விடுவார்களாயின். வேறு யாருமே அவர்களுக்கு துன்பம் நினைக்கவும் செய்யவும் வேண்டாம். நல்வழி நூல்கள் கூறுவனவற்றை உள்ளத்தே கொள்ளாமை புல்லறிவாண்மையினால் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு கொள்ளாததால் அவர்கள் துன்பத்திலேயே ஆழ்வார்கள்.

Transliteration:

arumaRai sOrum aRivilAn seyyum
perumiRai thane thanakku

aru maRai – The teachings in books of ethics
sOrum – letting them slip without practicing
aRivilAn – ignorant fool
seyyum – causes
peru miRai – great misery
thane thanakku– for self on his own

Ignorant fools bring up on themselves great misery on their own, by not adhering by the great teachings of ethical works of erudite. Others don’t have to intend or do anything to cause their miseries. For those who donot know good ways on their own and cannot understand the ways taught by ethical works, they are truly ignorant.

“Ignorant fools not adhering to the great teachings drawn
from ethical works, bring misery to themselves on their own”

இன்றெனது குறள்:

நன்னூல் நவில்வழி நண்ணாத பேதையர்
துன்புசெயும் தாமே தமக்கு

nannUl navilvazhi naNNAda pEdaiyar
thunbuseyum thAmE thamakku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment