குறளின் குரல் – 854

21st Aug 2014

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமொரு நோய்.
                        (குறள் 848: புல்லறிவாண்மை அதிகாரம்)

ஏவவும் – பிறர் “இதைச் செய்” என்று செலுத்தினாலும்
செய்கலான் – செய்யவதற்கறியான்
தான் தேறான் – தாமாகவே இதை இவ்வாறு செய்யவேண்டுமென்ற செயலறிவும் இல்லாதான்
அவ்வுயிர் – அவனுடைய உயிர்
போஒம் அளவும் – அவன் இறந்துபடும் காலம் வரை
ஒரு நோய் – ஒரு தொடர்ந்த பிணியாகத் தான் இருக்கும்

“தமக்காகவும் தெரியாது, சொன்னாலும் புரியாது” என்று பேச்சு வழக்கிலே நாம் கூறுவதையே இக்குறள் கூறுகிறது. தாமாகவே எதையும் செய்யும் அறிவும் இல்லாது, பிறர் இவ்வாறு செய்க என்று செலுத்தியும், ஒன்றைச் செய்ய அறியாதவனுக்கு, அவனுடைய உயிரானது அவன் வாழும் வரையும் பிணியாகத்தான் இருக்கும், என்கிறார் இக்குறள்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா? அறிவுடைமையே குறைவற்ற செல்வம். அறிவின்மை ஒருவருக்கும் நோயைப் போன்றதே, போக்கிக்கொள்ள முயலாதவரை, உடனிருந்தே, வளர்ந்து, உடம்பில் புரையோடிக் கொல்லவும் செய்யும் என்பதை உள்ளுறையாகச் சொல்வது இக்குறள்.

Transliteration:

Evavum seygalAn thAnthERAn avvuyir
pOom aLavumoru nOi

Evavum – Even if others direct, “do it this way”
seygalAn – a fool who does not know how to do a deed
thAn thERAn – And on his own also, does not know how to do it
avvuyir – his life
pOom aLavum – until he dies
oru nOi – is like a disease.

He would not know himself nor would understand, even if advised”, is something that people say all the time about some ignorant fools. This verse is an expression of the same thought. In addition, it says the life of such a person is nothing but a lingering disease.

Disease free life is wealth in abundance. Also, wisdom is undiminishing wealth. Ignorance is like disease. Unless one makes an effort to remove his ignorance, it grows inside, to make a body useless and eventually kill the person – this is what is implied through this verse.

“He would not himself, nor would yied to advice;
Such person’s life is a lingering lifelong disease”

இன்றெனது குறள்:

பிறர்சொல்லும் தேராதான் தானும் தெளியான்
இறக்கும் வரையும் பிணி

piRarsollum therAdAn thAnum theLiyAn
iRakkum varaiyum piNi.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment