குறளின் குரல் – 961

6th Dec 2014

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி 
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
                                      (குறள் 955: குடிமை அதிகாரம்)

வழங்குவதுள் – தம் வாழ்க்கை வளம் வற்றி தமது வள்ளன்மையாகிய இயல்பிலிருந்து
வீழ்ந்தக் கண்ணும் – தாழ்ந்து வீழ்ச்சி அடைந்த போதும்
பழங்குடி – ஒண்மை பொருந்திய நற்குடிப் பிறப்பாளர்
பண்பில் – தமது வள்ளன்மையிலிருந்து
தலைப்பிரிதல் இன்று – நீங்குவது இல்லை

காலத்தின் போக்கிலே, வாழ்ந்தவர் வீழ்ந்தாலும், நற்குடிப்பிறந்தோர் தமக்குப் பிறப்பால் உற்றதாகிய நல்ல குணங்களை விட்டு நீங்கார் என்பது பொதுக் கருத்து, நற்குடிப்பிறப்பின் மேன்மையை விளக்க. தம்முடைய வாழ்க்கை வளம் வற்றி, தமது வள்ளன்மைக்கு கேடு உற்றபோதும், நற்குடிப் பிறப்பாளர், தமது வள்ளன்மையினின்று நீங்காத இயல்பினர் என்கிறார் வள்ளுவர் இக்குறளில்.

இக்குறளின் கருத்தை ஒட்டிய பல நாலடியார் பாடல்களும், பழமொழிப் பாடல்களும் உள்ளன. அவற்றுள் சில”

“உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும் குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்” 
“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர் செய்வர் செயற்பாலவை” 
“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார்” 
“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்த கண்ணும் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பாலவை” 
                                                                                                 (நாலடி 141, 147,148,185)
“பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகையார்” 
“ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின் மேல்” 
                                                                                       (பழமொழி 96,119)

ஔவையாரின் மூதுரைப் பாடலும் இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

இப்பாடலின் இரண்டாவது வரியைத் தவிர மற்ற வரிகளெல்லாம், இக்குறளின் கருத்தோடு பொருந்தி இயைவதைப் பார்க்கலாம்.

Transliteration:

Vazhanguva duLvIzhndak kaNNum pazhagkuDi
paNbil talaippiridal inRu

VazhanguvaduL – When the wealth shrinks, from the benevolent nature
vIzhndak kaNNum – if had to fall
pazhagkuDi – people of noble birth
paNbil – in their character of grace and benevolence
talaippiridal inRu – will not fall or wean

Because of the passing times, changing tides wealthy nobility shall not lose the virtues imbibed through their birth is the general thought, known well. In this verse, vaLLuvar says, the act of benevolence shall never fall from the nobility, even during the adverse times of their life and they lose their ability to shower their grace as before.

The thought is so common and is so entrenched in the poet’s communitys’ lore, especially in nAlaDiyAr, there are many verses that again and again have pointed out the same. Pazhamozhi nanURu also has verses that stress the thought that people of higher birth or nobility shall not falter in their stature even if the times are adverse for them.

AuvayyAr’s mUDurai poem – “aTTalum pAl suvayik kunRAdu” – is more profound and well known in its examples. The more the milk is heated, it will diminish in quantity, but will not lose its taste; even they fall, nobility is nobility, like how if conch is shown in fire, it shall still be white without building soot around it.

“Though times have rendered their wealthy disposition fall
the nobility shall not fail in the grace of benevolence at all”

இன்றெனது குறள்:

வள்ளன்மை வற்றார் வழங்கிவளம் வற்றினாலும்
ஒள்தொல் குடிப்பிறப்பா ளர்

vaLLanmai vaRRAr vazangivaLam vaRRinAlum
oLthol kuDippiRappA Lar

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment