குறளின் குரல் – 969

14th Dec 2014

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய 
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
                                               (குறள் 963: மானம் அதிகாரம்)

பெருக்கத்து வேண்டும் – எல்லாச் செல்வமும், வளங்களும் நிறைந்துள்ளபோது ஒருவருக்கு வேண்டும்
பணிதல் – பணிவுடைமை
சிறிய – வளங்கள் குறைந்து
சுருக்கத்து வேண்டும் – வறியராகும் போது
உயர்வு – குடிப்பெருமையினைக் காக்கும் வகையில் மானத்தை இழக்காத மனம் வேண்டும்

எல்லாம் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவருக்கே பணிவுடைமை வேண்டும். அது குடிப்பிறப்புக்கும் ஏற்றதான பண்பாயிருக்கும். அதேபோல், உயர்குடிப் பிறந்து, காலம் காலமாக செல்வராயும், வளங்கள் நிறைந்தோராயும் இருந்துவிட்டு, அவ்வளங்கள் குன்றி வறுமை வரும்போதும் கூட, தங்கள் குடிப்பெருமையைக் காக்கின்ற வகையிலே மானத்தை இழக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.

முன்பு இவர் நல்லவர்; மிக்க அருளுடையவர்; இப்போது வறுமை யுற்றார்’ என்று கூறி இகழ்ந்து செல்வர் அலட்சியமாக நோக்குங்கால், மானமுடையார் உள்ளம், கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும், என்று கூறுகின்ற நாலடியார் பாடலொன்று இதோ.

நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.

Transliteration:

Perukkaththu vENDum paNidal siRiya
Surukkaththu vENDum uyarvu

Perukkaththu vENDum – when in prosperity, a person must have
paNidal – modesty, humility
siRiya – when the wealth depletes
Surukkaththu vENDum – and becomes poor, one must keep
Uyarvu – dignity, honor

When a person has all wealth and comforts, must be modst and humble that befits the lineage. Likewise, born into nobility, but by circumstances, when someone becomes poor and depleted of all wealth, still shall not lose the dignity and honor, says this verse.

When others mock a person saying that he was earlier wealthy and blessed, but now has become poor, inside the persons’ heart, he would feel like flame in the ironsmiths’ oven, says a nAlaDiyAr verse, implying that they would not be able bear words that deride their honor, dignity.

“When in prosperity, one must have humility, modesty 
When in adversity, one shalln’t lose honor and dignity”

இன்றெனது குறள்:

உயர்ந்த நிலையில் பணிவுவேண்டும் தாழ்ந்து
அயர்ந்தாலும் மானம்வேண் டும்

uyarnda nilaiyil paNivuvENDum tAzhndu
ayarndAlum mAnamvEN Dum

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment