குறளின் குரல் – 994

8th Jan 2015

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் 
திண்மைஉண் டாகப் பெறின். 
                                    (குறள் 988: சான்றாண்மை அதிகாரம்)

இன்மை – செல்வமில்லா வறுமை
ஒருவற்கு இனிவன்று – ஒருவருக்கு எவ்வித இழிவும் தராது
சால்பென்னும் – சான்றாண்மையாகிய பண்பு உச்சத்திலே
திண்மை – உறுதி
உண்டாகப் பெறின் – ஒருவருக்கு கிடைக்கப் பெற்றால்

சால்புடைமையாம் பண்பின் உச்சத்திலிருந்து வழுவாத உறுதி ஒருவருக்குக் கிடைக்கப்பெற்றால், அவருக்கு செல்வமில்லாத வறுமையிலும் எவ்வித இழிவும் வராது என்பது இக்குறளின் பொருள். பண்பு நலமே செல்வமாக இருக்கையில், மற்ற செல்வமில்லாமையை வறுமையாக எவ்வாறு கொள்வர் சான்றோர்? என்று உள்ளுறையாக வினவுகிறார் வள்ளுவர், இக்குறளில்

Transliteration:

Inmai oruvaRku iLivanRu sAlbennum
thiNmaiuN DAgap peRin

Inmai – Being poor
oruvaRku iLivanRu – is not demeaning or being lowly to someone
sAlbennum – in the virtue excellence of sublmity
thiNmai – resolve
uNDAgap peRin – if a person has had

A person that does not slip from the excellence or sublimity in life, will not be lowly even if he loses his wealth and becomes a pauper. When that excellence of virtue itself is more than any wealth, how would they consider themselves poor even if they don’t have physical wealth? – asks vaLLuvar in an indirect way through this verse.

“It is not beneath or lowly in stature, even if poor
when the virtue of sublimity is held high and near”

இன்றெனது குறள்:

இழிவன்று இல்லாமை உள்ளத்தில் சால்பு
அழியா வலிவுடைத்தா யின்

izhivanRu illAmai uLLaththil sAlbu
azhiyA valivuDaiththA yin

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment