குறளின் குரல் – 1030

13th Feb 2015

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு.
                      (குறள் 1024: குடி செயல்வகை அதிகாரம்)

சூழாமல் – வினைகளை முடிக்கும் திறனை வேண்டிக் கேட்காமலேயே
தானே – தாமாகவே
முடிவு எய்தும் – அவரை வந்து அடையும்
தங்குடியைத் – தமது குடியை, குலப்பெருமையை உயர்த்தும் செயல்களை
தாழாது – தாமதிக்காது
உஞற்றுபவர்க்கு – விரைந்து முயல்பவருக்கு

தம் குடியின் பெருமையை உயர்த்தும் செயல்களை தாமதிக்காமல் விரைந்து முயல்பவருக்கு, அச்செயல்களை முடிக்கும் திறனும் தாமாகவே, அவர் வேண்டிக் கேட்காமலேயே அவரை வந்து அடையும். இக்குறள் முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றினை மெய்ப்பிக்கிறது. எடுத்துக்கொண்ட செயல்களில் ஊக்கமும், செயலாக்க விரைவும் இருந்தாலே, செயல்களை செய்துமுடிக்கும் திறன் தானாகவே வந்து சேரும்.

Transliteration:

sUzhAmal tAnE muDiveidum thangkuDiyaith
thAzhA thunjaRRu bavarkku

sUzhAmal –Without asking the ability and skills
tAnE – on its own
muDivu eidum – those skill will develop in a person
thangkuDiyaith– doing the deeds that will uplift the stature of lineage
thAzhAthu – without delay
unjaRRubavarkku – and attempt expediently

The deeds that will uplift the glory of the lineage, when attempted expediently by a person, the skills and abilities to accomplish the same will automatically develop in that person. After all we are aware of the old adage “muyaRchi thiruvinaiyAkkum..” (Serious and Sincere try will benefit the undertaken.). The eagerness to pursue seriously the undertaken deed, and doing it expediently will fetch the ability to do the task successfully.

“When the desire to uplift the glory of lineage is there
Then the skills and the abilities develop fare and square.

இன்றெனது குறள்:

முயலாமல் தாமாய் முடியும் குடியை
உயர்த்த விரைந்துழைப் பார்க்கு

muyalAmal thAmAi muDiyum kuDiyai
uyarththa virainduzhaip pArkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment