குறளின் குரல் – 1031

14th Feb 2015

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
                                  (குறள் 1025: குடி செயல்வகை அதிகாரம்)

குற்றம் இலனாய்க் – தவறானவற்றைச் செய்யாமல்
குடி செய்து வாழ்வானைச் – தம்முடைய குடியினை மேன்மையுற செய்து வாழ்வானை
சுற்றமாச் – தமது சுற்றமாகக் கொள்ள விரும்பி
சுற்றும் – அவரைச் சுற்றிவரும்
உலகு – இவ்வுலகானது.

தாமும் எத்தகைய தவறான செயல்களையும் செய்யாமல் தம்முடைய குடியையும் மேன்மையுறச் செய்து வாழ்வாரைத் தம்முடைய சுற்றமாகக் கொள்ள விரும்பி அவரையே சுற்றிவருவர் உலகோர், என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. எளிய கருத்தை தெளிவாகச் சொல்லும் குறள்.

மேன்மையானவரை தம் வழிகாட்டியே உலகில் வாழ்வு நெறி அறிந்த எல்லோரும் கொள்ளும் ஒன்றாக இருத்தலால், பொதுவான உலக வழக்கான ஒன்றைக் குறிப்பதற்காக “உலகு” என்கிறார் வள்ளுவர்

Transliteration:

kuRRam ilanAik kuDiseidu vAzvAnaich
suRRamach suRRum ulagu

kuRRam ilanAik – Not doing wrongful deeds
kuDi seidu vAzvAnaich – one that is in pursuit of uplifting the lineage
suRRamach – to have as kith and kin
suRRum – will revolve around such person
ulagu – the world

The world will embrace and revolve around the persons that are not ever indulgent in any wrongful deeds, always in the pursuit of uplifting and making it better, says this verse. Simple thought expressed clearly and succinctly.

Exemplary people and their ways are taken role model and model respectively. To imply that general practice vaLLuvar uses the word “ulagu”.

“The world will embrace and revolve around persons that do no wrongful
and are in the pursuit upholding the glory of lineage, as their kin, heartful”

இன்றெனது குறள்:

உறவென சூழும் உலகெலாம் குற்றம்
அறகுடி மேன்மை உற

uRavena sUzhum ulagelAm kuRRam
aRakuDi mEnmai uRa

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment