குறளின் குரல் – 1047

105: (Destitution – நல்குரவு)

[This chapter on destitution speaks about not having, abject poverty. Right after the last verse of the previous chapter on agricultural farming, which talked about who would be mocked about their lethargic stay by the kind hearted lady, the cultivating land, this chapter defines what the real povertys’ nature, almost to scare people of their claim of being poor; pretty much implying and underlining the importance of work as worship]

2nd March, 2015

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் 
இன்மையே இன்னா தது.
                         (குறள் 1041: நல்குரவு அதிகாரம்)

இன்மையின் – வறுமையின்
இன்னாதது யாதெனின் – துன்பம் தருவது என்னவென்றால்
இன்மையின் – வறுமையைவிட
இன்மையே – வறுமையே
இன்னாதது – கொடுமையானதும் துன்பமானதும் ஆகும்

வறுமையைவிட துன்பம் தருவது என்னவென்றால் வறுமையே வறுமையைவிட துன்பமானது என்று சொல்லி நல்குரவு அதிகாரத்தைத் துவக்குகிறார். ஔவையார் தனிப்பாடல் திரட்டிலே அரியது, பெரியது, கொடிது என்ற பொருள்களில், கொடிது யாது என்று இவ்வாறு கூறி துவக்குகிறார்.

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை.

வறுமையினும் கொடுமையானது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் கருத்தையே ஔவையும் வழிமொழிகிறார்.

டென்மார்க்கைச் சார்ந்த தற்காலக் கவிஞரான வேதா அவர்களின் அழகான கவிதை வெளிப்பாட்டையும் பார்ப்போம். கவிதை வறுமையைப் பற்றியதாயினும், அருமை, எளிமை.

இல்லாமை தரும் நிலைமை
வறுமை! பெரும் கொடுமை!
வெறுமை! இதிலில்லை பெருமை!
உண்மை உழைப்பு வறுமை 
வராமை காக்கும்! முயலாமை
இயலாமை இணைதலே வறுமை.

தனிமை ஒரு வகை வறுமை.
இனிமை வார்த்தை பேசாமை,
அன்பின்மை வேண்டாத வறுமை.
அறியாமை, அறிய மனமில்லாமை, 
ஈயாமை, ஆதரவு இல்லாமை,
உண்மை பேசாமையும் வறுமை.

மை போன்றிவை கருமைத்
தன்மை கொண்டு மேன்மை, 
பெருமை அழிக்கும் உண்மை.
செழுமை அழிக்குமிச் சிறுமை
வராமை காத்தல் வலிமை.
வறுமை தடுத்தல் மேன்மை.

Transliteration:

Inmaiyin innAdadu yAdenin inmaiyin
inmaiyE innAda du

Inmaiyin – worse than poverty
innAdadu yAdenin – what is more misery causing
inmaiyin – more than poverty
inmaiyE – poverty itself is
innAdadu – misery causing.

What is worse misery than poverty is poverty itself; there is nothing truly more misery causing than poverty. Auvayyars’ poetry says it even more succinctly, in one single line “koDidu koDidu vaRumai koDidu”.

There is a beautiful poetry written by a present day poet from Denmark. Perhaps on a later day, a complete translation may be done for this too. Poverty is not having any; a great misery; there is no glory in that; true labor protects from poverty; combination of not trying, being unable to do is poverty.

Being alone is poverty; not speaking sweet words is poverty; not showing love is poverty; ignorance, not being interested to know, not giving,, not having support, not speaking truth all are poverty. So on goes this beautiful poetry.

“What is worse misery than poverty?
Poverty is truly worse than poverty”

இன்றெனது குறள்:

வறுமையினும் துன்புயாது என்று வினவின்
வறுமை வறுமையினும் துன்பு

vaRumaiyinum thunbuyAdu enRu vinavin
vaRumai vaRumaiyinum tunbu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment