குறளின் குரல் – 1065

20th March, 2015

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் 
மேவார் இலாஅக் கடை.
                        (குறள் 1059: இரவு அதிகாரம்)

ஈவார் கண் – ஈந்துவக்கும் ஈகையாளர்க்கு
என்னுண்டாம் – எவ்வாறு கிடைக்கும்?
தோற்றம் – புகழ்
இரந்து கோள் மேவார் – யாசித்து அவரிடம் செல்வோர்
இலாஅக் கடை – இல்லாது போயின்

உலகில் இரப்பாரே இல்லையென்றால் ஈவார்க்கு புண்ணியம் சேர்ப்பதற்கும், புகழ் அடைவதற்கும் என்னவாம் வழி? சென்ற குறளின் கருத்தை ஒட்டியதே இக்குறளும். கேள்வி மூலமாக பதிலையும் சொல்லி விடுகிறார் வள்ளுவர். இரந்து கொள்வார் சென்று இரக்கவில்லையாயின் ஈவார் என்பார்க்கு புகழுக்கு யாதொரு வழியுமில்லை.

Transliteration:

IvArkaN ennunDAm thORRam irandukOL
mEvAr ilAak kaDai

IvAr kaN – For benovolent hearts
ennunDAm – how will they have?
thORRam – praise and fame?
irandu kOL mEvAr – persons to go to them seeking alms
ilAak kaDai – if there is none

If there is none to seek alms, or help, how would benovolent hearts have any fame or glory? – A verse along the same thought line of the earlier verse. By asking this question, vaLLuvar hints at the obvious answer, that there indeed is none!

“How would benovelent hearts gain any fame
If none to go and seek alms from the same?”

இன்றெனது குறள்:

இரப்போர் இலையாயின் ஈவார்க்கெவ் வாறாம்
புரப்போர்க் குளதாம் புகழ்

irappOr ilaiyAyin IvArkkev vARAm
purappOrk kuLadAm pugazh

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment