குறளின் குரல் – 1066

21st March, 2015

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை 
தானேயும் சாலும் கரி.
                            (குறள் 1060: இரவு அதிகாரம்)

இரப்பான் – யாசிக்கிறவர்கள்
வெகுளாமை வேண்டும் – சினவாமை வேண்டும் (ஈவார்க்கும் வறுமை வந்துழி ஈகை இயலாத போது)
நிரப்பு இடும்பை – வறுமையின் துன்பத்துக்குத்
தானேயும் – தாமே ஒரு
சாலும் கரி – சான்றாக இருக்கையில் (அடுத்தவரை எப்படி வாட்டும் என்று அறிந்த பின்னும்)

பிறரிடம் இரப்பவர்கள் ஈவார்க்கியலாது போகும் போது அவர்கள் மீது கோபம் கொள்ளக்கூடாது; வறுமையினால் உறும் துன்பத்துக்கு அவர்களே சான்றாக இருப்பதால், மற்றவர்களுக்கும் ஈவதற்கியலாது போகக்கூடிய நேரம் வரும் என்று உணர்ந்து, அதனால் அவர்கள் படும் துன்பமும் அறிந்திருக்கவேண்டும்.

Transliteration:

irappAn veguLamai vENDum nirappiDumbai
thAnEyum sAlum kari

irappAn – those who seek alms from others
veguLamai vENDum – must not be angered (when for some reason their benovelence fails)
nirapp(u) iDumbai – for the misery of poverty
thAnEyum – even self has been
sAlum kari – an example (understanding how miserable the poverty is!)

Those who seek alms from others shall not be angry at them, if they are not able to help out, as they very well have experienced the misery of poverty and must all the more understand the inability of someone who would otherwise help out, but is not able to because of hardtimes.

“Alms seekers shall not be angry; for they stand testimony
to the hardship of poverty and must not display acrimony”

இன்றெனது குறள்(கள்):

தாம்வறுமைத் துன்பின்சான் றாயிருக்க யாசிப்போர்
தாம்சினந்து செய்தல்வேண் டாம்

thAmvaRUmaith thunbinsAn RAyirukka yAsippOr
thAmsinandu seydalvEN Dam

(இக்குறள் ஈயவியாலாது போவோரைப் பற்றியாதலால், இரப்போர் என்பதை உள்ளுரையாக வைத்து, ஈயார் மேல் அவர் வெகுளக்கூடாது என்பதைச் சொல்லும் மற்றொரு குறளும் எழுதப்பட்டது)

வறுமைத்துன் பின்சான்றாய் தாமே இருக்க
உறுவதேன் கோபமீயார் மேல்?

vaRumaithtun binsAnRAi tAmE irukka
uRuvadEn kOpamIyAr mEl?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment