குறளின் குரல் – 1080

4th April,2015

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் 
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
                          (குறள் 1074: கயமை அதிகாரம்)

அகப்பட்டி – தம்முடைய அகமாகிய திரிகின்ற நாய்போன்று
ஆவாரைக் காணின் – ஆகிவிடுவாரைக் கண்டால்
அவரின் மிகப்பட்டுச் – தாமே ஏதோ அவரினும் மேலோர் என்று
செம்மாக்கும் கீழ் – இறுமாப்பு அடைவர் கயவர்கள்

பொருட்பாலின் இந்த இறுதி அதிகாரத்தை எழுதும்போது வள்ளுவரின் நையாண்டி சிறிது உச்சத்தில் இருந்திருக்கவேண்டும். உள்ளளவில் திரிகின்ற நாயைப் போல் ஆகிவிடுகின்ற பிறரைக் கண்டால், கீழோராம் கயவர்கள், தாமே அவரினும் மேலோர் என்று இறுமாப்பு அடைவார்கள், ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளைப் போன்று, என்கிறார் இக்குறளில். அதாவது தன்னிலும், கீழோர் ஒருவர் இருக்கிறாரே என்று மகிழ்வதுபோல! அவர்களுக்கு தங்களைத் திருத்திக்கொள்ளத் தோன்றுமா? தாம் அந்த அளவுக்கு மோசமில்லை என்று நினைந்து தாம் சென்றவழியிலேயே சென்று மேலும் கயமைத்தனத்தில்தான் ஈடுபடுவர்.

Transliteration:

agappaTTi AvAraik kANin avarin
migappaTTuch chemmAkkum kIzh

agappaTTi – mind that wanders like a dog
AvAraik kANin – when they (base) see such people (baser)
Avarin migappaTTuch – as if they are higher in stature and character
chemmAkkum kIzh – base will be proud.

By the time, vALLuvar wrote this last chapter of Section on “Wealth”, he must have developed a sense of sarcasm, which is evident in this verse too. Base, when they see others that wander in their minds, as dogs, indeed feel happy and proud that they are better than such baser people or there are baser people compared to them. If such a thought sprang in a person, would he mend self? Would only be satisfied that he is not worse off and would tend to go the already treaded path only.

“Seeing baser than self, whose mind wanders like a dog,
A base would feel better and proud, blinded by that fog”

இன்றெனது குறள்:

தம்மிலும் கீழாய் திரிவோரைக் காணின்கீழ்
தம்மை உயர்வாயெண் ணும்

thammilum kIzhAi thirivOraik kANinkIzh
thammai uyarvAyeN Num

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment