குறளின் குரல் – 1120

14th May, 2015

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண்ணொவ்வேம் என்று. 
                                     (குறள் 1124: நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்)

காணின் – கண்டால் (அவள் கண்ணை)
குவளை – குவளை மலர்
கவிழ்ந்து – வெட்கி தலை கவிழும்
நிலன் நோக்கும் – பூமியைப் பார்க்கும் (மீண்டும் பார்க்கவியலாது)
மாணிழை – அழகிய அணிகளை அணிந்த பெண்ணவளின்
கண்ணொவ்வேம் என்று – கண்ணழகுக்குத் தாம் ஒப்பிலோமென்று.

அழகிய குவளைமலர், அவ்வழகிய அணிகளைப் பூண்ட பெண்ணின் கண்ணழகைக் கண்டு வெட்கும், நிலம் நோக்கும், தாமவளின் கண்ணழகுக்கு ஒப்பாக மாட்டோமென்று, என்று அழகிய தன் காதலியின் கண்ணழகைப் பாராட்டும் தலைவன் பிறரிடம் பெருமிதப்படுவதாக நயமிகு கற்பனை.

Transliteration:

kaNin kuvaLai kavizhndu nilannOkkum
mANizai kaNNovvEm enRu

kaNin – when it see her eyes
kuvaLai – the KuvaLai flower (purple water-lily)
kavizhndu – put down
nilan nOkkum – and look at the floor
mANizai – love decorated with jewels
kaNNovvEm enRu – will not compare to her eyes.

The purple water-lily will put its head down in shame, thinking that its beauty cannot compare to the beautiful eyes of the girl decorated with jewels, if it can see. A verse as if the man in lover prides about his lady-loves’ beautiful eyes!

“If the water-lily can see, in shame it will look down the ground;
it cannot compare to jewel-decorated girls eyes be spell-bound”

இன்றெனது குறள்:

நிலம்பார்த்து நாணும் குவளைதாம் காணின் 
இலமிவள் கண்ணுக்கொப் பென்று

nilampArttu nANum kuvaLaitAm kANin
ilamivaL kaNNukkop penRu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment