குறளின் குரல் – 1119

13th May, 2015

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 
                              (குறள் 1123: நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்)

முறி மேனி – இளந்தளிர் போன்ற பசும்மேனியும்
முத்தம் முறுவல் – முத்து வரிசையென முறுவலிக்கும் பற்களும்
வெறி நாற்றம் – இயற்கையாகவே கூடிய நல்ல வாசமும்
வேலுண்கண் – மையில் குளித்த வேலன்ன கண்களும்
வேய்த் தோள் – மூங்கில்போன்ற தோள்களும்
அவட்கு – அவளுக்கு.

தலைமகளின் ஒட்டுமொத்த அழகை தலைமகன் வியந்து, விதந்து கூறுமாறு அமைந்த குறள்! அவளுக்கு இளம் பசுந் தளிர் போன்ற மேனியாம்; அவளது பல்வரிசையோ முத்துச் சரமாம்; அவளுக்கு இயற்கையாக அமைந்த நல்ல வாசமாம்; அவளுடைய மையால் குளித்த கண்களோ கூர்மையான வேலாம்; தவிரவும் அவளுடைய தோள்களும் மூங்கில் போன்றனவாம்.

பாண்டியனின் ஐயத்தை தலைமகனின் வாயிலாக வள்ளுவர் தீர்த்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது! இந்த குறளில் ஒட்டு மொத்தமாக பெண்ணினை தலைமகன் வாயிலாக வள்ளுவர் வருணிப்பதே தெரிகிறது.

Transliteration:

muRimEni muttam muRuval veRinARRam
vEluNkaN vEyttOL Lavatku

muRi mEni – a body of a young leaf
muttam muRuval – teeth set like pearl beads
veRi nARRam – natural fragrance in the body
vEluNkaN – dyed, spear like eyes
vEyt tOL – shoulder like bamboo bend
avatku – she has.

In this verse VaLLuvar describes through the words of a man in love, his lovers physical form as a combination of best of similes for each part. Her whole body looks like a fresh, young leaf, so soft; her teeth row is a necklace of pearl beads; she has a natural fragrance in her; Her dye bathed eyes are like piercing spears; her shoulders are like bamboo bends.

It seems like VaLLuvar has answered as a poet to the Pandia Kings’ doubts bcause of which the poet NakkIra had a quarrel with the Godhead!

“Her frame is a tender shoot; teeth set as pearl row; she has natural good fragrance; 
Her dye-bathed eyes’re piercing spears; shoulders like bamboo – such is her radiance”

இன்றெனது குறள்:

தளிர்மேனி முத்துப்பல் நல்வாசம் கண்மை
குளித்தவேல் மூங்கில்தோ ளாள்

thaLirmEni muththuppal nalvAsam kaNmai
kuLittavEl mUngilthO LAL

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

2 Responses to குறளின் குரல் – 1119

  1. வெறி – பயித்தியம்; மதம்; சினம்; கலக்கம்; ஒழுங்கு; வட்டம்; கள்; குடிமயக்கம்; விரைவு; மணம்; காண்க:வெறியாட்டு; வெறிப்பாட்டு; மூர்க்கத்தனம்; பேய்; தெய்வம்; ஆடு; பேதமை; அச்சம்; நோய்; ஆள்களின்றிவெறுமையாகை

    வெறி என்ற சொல்லுக்கு மயக்கமும் என்ற பொருளே அகராதி கூறுகிறது. ஆதலால் இயற்கையாக மணம் என்பது பொருந்தாது என்றே நினைக்கிறன். ஆதலால் பாண்டியனின் சந்தேகத்திற்கு நக்கீரர் சொன்னதே பதிலாக இருக்கும்.

    • ashoksubra says:

      இறைவனே வந்து கேட்கும்போது அறிவுச் செருக்கால் நக்கீரன் பராசக்தியின் கூந்தலுக்கே இயற்கை மணம் இல்லை என்று வாதிட்டது தவறுதான்..

      இயற்கையும், இந்த அண்டாண்டங்களும் அன்னையின் உச்வாஸ (வெளிமூச்சு) வெளிப்பாடாக லலிதா சஹஸ்ரநாமம் “உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவலி” என்கிறது. இலக்கண இலக்கிய அறிவுமட்டும் ஒருவருக்குப் பரஞானம் சித்திக்கத் தராது..

      இயற்கையே மணம் நிறைந்தது. இவ்வியற்கையை கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் படைத்துக், காத்து, அழிக்கும் வேலையை, அவளின் கணந்தோறும் செய்கின்றவள் கூந்தலில் இயற்கையிலேயே மணமில்லை என்றது நக்கீரரின் அறிவுச் செருக்கு.

      அதைக் கண்டிக்கவே அந்த திருவிளையாடல் என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய இலக்கியங்களில் காணப்படும், சொல்லப்படும் செய்திகளை ஒரு பிரமாணத்தைமட்டும் வைத்து முடிவு செய்யக்கூடாது! புராணங்களும் தோத்திரங்களும் கூறும் நுட்பமான செய்திகள் ஏராளம்..

      இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.. உங்களுக்கு ஆர்வமிருந்தால், நேரமிருந்தால் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாமம் இவற்றின் விளக்கவுரைகளைத் தேடிப் படிக்க வேண்டுகிறேன். சாதாரணப் பெண்களுக்கு இருக்குமோ இல்லையோ, அன்னைப் பராசக்தியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு.

      எல்லாமறிந்தோம் என்ற செருக்கிலே, இறைவனே நேரில் வந்தும் எதிர்வாதம் செய்தது நக்கீரனின் தவறு. அச்செருக்குக் கண்ணை மறைக்கும், என்பதை உணர்த்தவே அந்த விளையாடல். திரைப்படத்துக்காகச் சொல்லும்போது தத்துவார்த விளங்கங்கள் எடுபடாது, பெரும்பாலானோர்க்குப் புரியவும் புரியாது.. அதனால் எளிமைப் படுத்தப்பட்டதோ, அல்லது அவ்வாறுதான் புரிந்துக்கொள்ளப்பட்டதோ, அடியேன் அறியேன்..

Leave a comment