குறளின் குரல் – 1209

11th Aug, 2015

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் 
சினைப்பது போன்று கெடும்.
                               (குறள் 1203: நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)

நினைப்பவர் போன்று – என்னை நினைப்பவர் போன்றிருந்து
நினையார்கொல் – பின் என்னைப் பற்றி நினைக்க மாட்டாரோ?
தும்மல் சினைப்பது போன்று – தும்மல் அரும்புதல் நாசிகளில் தோன்றி பின்பு நின்றுவிடுவதுபோல்
கெடும் -அவருடைய என்னைப்பற்றிய எண்ணமும் பாதியிலேயே நின்றுப்போகிறது.

சில நேரங்களில் தும்மலானது நாசியைக் குடைந்து வருவதுபோல் தொடங்கி, அதற்கு ஆயத்தம் ஆகும்போது வாராது நின்றுப்போகும். அதே போல் என்னுடைய காதலுக்கு உரியவரும் என்னை நினைப்பது போல தோன்றச் செய்து, பின்பு நினையாமல் இருந்துவிடுவாரோ? இவ்வாறு காதலாழ்பட்ட இருவருமே நினைப்பார்களாம். குறளின் போக்கு, இருபாலருக்கும் பொருந்துவதாகவே இருந்தாலும், பரிமேலழகர் உட்பட்ட எல்லா உரையாசிரியர்கள் மீண்டும், இதை பெண்டிருக்கு மட்டும் பொருந்துவதாகச் உரை செய்துள்ளனர்.

Transliteration:

Ninaippavar pOnRu ninaiyArkol thummal
chinaippadu pOnRu keDum

Ninaippavar pOnRu – As if he/she was going to think about me always
ninaiyArkol – then would probably not think?
thummal chinaippadu pOnRu – Like how sneeze sometimes cheats after teasing to burst
keDum – his thoughts stop half way?

Sometimes sneez would start as if it was going burst and half way, it would stop after teasing the nostrils for a few seconds. Would my beloved also do similarly, appearing to be holding thoughts about me, and then not think about me? This seems to be the thought dominating the minds of people that suffer the separation. This verse, though structured to be common to both genders (perhaps transgenders and same sex partners, as the society has become more accepting), most commentators have said it from the perspective of a maiden in love.

“Just like the cheating sneeze half-way stopping
Not thinking would my beloved also be dropping?”

இன்றெனது குறள்:

வாராக் கெடும்தும்மல் போலே நினையாரோ
வாரா நினைவது கெட்டு?

vArAk keDumtummal pOlE ninaiyArO
vArA ninaivadu keTTu?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment