குறளின் குரல் – 1211

13th Aug, 2015

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் 
எம்நெஞ்சத்து ஓவா வரல்.
                           (குறள் 1205: நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)

தம்நெஞ்சத்து – தன்னுடைய உள்ளத்திலிலே
எம்மைக் கடி கொண்டார் – நான் வந்து ஏகா வண்ணம் தன்னைக் காத்துக்கொண்ட என் காதலர்
நாணார் கொல் – வெட்கப்படமாட்டாரோ?
எம்நெஞ்சத்து – என்னுடைய உள்ளத்தில் தான்மட்டும்
ஓவா வரல் – ஓயாது வந்து உறைவதர்க்கு?

என்னுடைய காதலர் தான் மட்டும் என் உள்ளத்திலே ஒயாமல் வந்து உறைகிறாரே, தான் என்னை அவருடைய உள்ளத்தில் நுழையாமல் அதைக் காப்பற்றிக்கொண்டு? அதற்கு அவர் வெட்கப்படமாட்டாரோ? என்று தன்னுள்ளாக சிந்தித்துக்கொள்கிறாள் காதற்தலைவி.

Transliteration:

Thamnenjattu emmaik kaDikoNDAr nANArkol
Emnejaththu OvA varal

Thamnenjattu – From his heart
emmaik kaDikoNDAr – protecting his heart that I don’t enter there.
nANAr kol – Won’t he feel ashamed?
Emnejaththu – that in my heart
OvA varal – he is incessantly there.

My lover visits my heart incessantly; why is not ashamed, when he is safeguarding his heart so that I don’t enter there? The maiden in love so thinks about the love being one sided, from her side and not being reciprocated by her lover

“He safeguards his heart so well to not let me in it
But he’s in my heart always. Is he not ashamed of it?

இன்றெனது குறள்:

என்னுள்ளத் தோயா துறைபவர் நாணாரோ
தன்னுள்ளம் யானேகாக் காத்து (யான் ஏகாக் காத்து )

ennuLLat tOyA duRaibavar nANArO
thannuLLam yAnEgAk kAttu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment