குறளின் குரல் – 1238

9th Sep, 2015

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் 
பசந்து பனிவாரும் கண்.
                           (குறள் 1232: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

நயந்தவர் – உன்னை விரும்பியவர்
நல்காமை – அன்பு நல்காமையை
சொல்லுவ போலும் – சொல்கின்றன போலும்
பசந்து – பசலை படர்ந்து, துன்பமுற்று
பனிவாரும் கண் – நீர் சொரியும் உன் கண்கள்.

முன்பு உன்னை விரும்பியவர் இப்போது அன்பு வழங்காமலிருப்பதை, பசலை பூத்து கண்ணீர் சொரியும் உன் கண்கள் சொல்லுகின்றன போலும், என்று காதற்தலைவியின் கண்கள் பனித்து அழகு இழந்திருப்பதைக் கண்ட தோழி இவ்வாறு கூறுகிறாளாம்.

நண்பர் கந்தா கீழ்கண்ட பாடல்களை ஒத்த கருத்துள்ளவையாகக் கூறியுள்ளார். அவற்றை பிற்சேர்க்கையாக இட்டுள்ளேன்

இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே

எனும் சரசுவதி அந்தாதி சரசுவதியைத் துதிப்பவர் நிலையைக் கூறுகிறது

தலைவன் அன்பு நல்காவிடில் தலைவி நிலை —

கலங்குந் திருமுக மெய்யும் புளுங்கும் கண்கணீர்
மலங்கும் பழுதுற்று வாக்கும் சலிக்கு மனமிகவே
புலம்பும் முறுவல் முக மறையும் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தலைவன் அன்பதனை இழந்தவர்க்கே!

Transliteration: 

Nayandavar nalgAmai solluva pOlum
Pasandu panivArum kaN

Nayandavar – that who loved you so much
nalgAmai – not being so now,
solluva pOlum – looks like is revealed (by)
Pasandu – shallowed
panivArum kaN – eyes brimming with tears

You lover, who loved you so much before, is not that compassionate now; you have grown pale and your eyes brim with tears, both indicating the above fact. This verse is said from the point of view of maidens’ friend and companion.

“Growing pale, your eyes, brimming with tears have announced
that your man that loved you so before is not so, as if denounced”

இன்றெனது குறள்:

பசலையில் நீர்சிந்தும் கண்களால் சொல்வாள்
வசத்தார் வழங்காதார் என்று

pasalaiyil nIrsindum kaNgaLAl solvAL
vasttAr vazhangAdAr enRu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment