குறளின் குரல் – 1239

10th Sep, 2015

தணந்தமை சால அறிவிப்ப போலும் 
மணந்தநாள் வீங்கிய தோள்.
                               (குறள் 1233: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

தணந்தமை – நீங்கியதை (காதற் தலைவன்)
சால – நன்கு, மிகவும்
அறிவிப்ப போலும் – யாவரும் அறிய தெரிவிக்கும் (தளர்ந்து), போலும்
மணந்தநாள் – அவரை கூடிய நாளில்
வீங்கிய தோள் – மகிழ்ச்சியில் பூரித்திருந்த தோள்கள்

அவரை மணந்து கூடியிருந்த நாட்களில் வளமாய் பூரித்திருந்த என்னுடைய தோள்கள், இன்று தளர்ந்து அவர் என்னை நீங்கியிருத்தலை யாவரும் மிகவும் நன்றாக அறிய, அறிவிக்கின்றன போலும். பிரிவாற்றாமையில் தனது தோள்கள் வாட்டமுற்றதைக் கண்டு ஏனென்று கேட்ட தோழிக்கு காதற்தலைவி இவ்வாறு கூறுகிறாள். தலைவன் நீங்குகையில் தலைவி தோள்கள் நெகிழ்வதைக் குறுந்தொகைப் பாடல் இவ்வாறு கூறுகிறது.

“மணப்பின் மாணலம் எய்தித் தணப்பின் ஞெகிழ்ப தடமெந்தோளே” (குறுந்தொகை:299:7-8)

Transliteration:

taNandamai cAla aRivippa pOlum
maNandanAL vIngiya tOL

taNandamai – That her lover went away
cAla – very well
aRivippa pOlum – announcing for others to know (her weakening shoulders)
maNandanAL – when he was with her after marrying her
vIngiya tOL – that swelled in pride and happiness

The shoulders that had swelled in happiness and pride after marriage are weak and feeble now, perhaps announcing to all, that he has gone away; for her friend who asks as to why her shoulders are weak and feeble, the maiden in love gives the possible reason.

“The shoulders that swelled after marriage day in pride and happiness,
have withered, as if to announce to all, about his being away, in sadness

இன்றெனது குறள்:

கூடுநாள் பூரித்த தோள்கள் பிரிவாலே
வாடும் பிறரறி ய

kUDunAL pUritta tOLgal pirivAlE
vADum piRaraRi ya

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment