குறளின் குரல் – 1240

11th Sep, 2015

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் 
தொல்கவின் வாடிய தோள்.
                                 (குறள் 1234: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

பணை நீங்கிப் – அவளது வளப்ப வனப்பு நீங்க
பைந்தொடி – பொன்வளைகள் அணிந்த பெண்
சோரும் – அவள் மெலிதலால் வளைகள் கழலும்
துணைநீங்கித் – அவளைக் கூடினாராம் துணைவர் நீங்கவும்
தொல் கவின் – பண்டு தொட்ட இயற்கை அழகுபெற்ற
வாடிய தோள் – ஆனால் இப்போது மெலிந்த தோள்கள்

மீண்டும் காதல் தலைவியில் தோள்கள் அழகிழந்ததைப் பற்றிய குறள். காதற் தலைவியைக் கூடிய அவளது துணைவர் நீங்கவும், பண்டு தொட்டு அழகு மிக்க அவளது தோள்கள் மெலிந்து போகும். அவளது வளப்பமும், வனப்பும், நீங்க பொன்வளை அணிந்த காதற் தலைவி மெலிவாள் என்கிறது இக்குறள்.

Transliteration:

paNainIngip painthoDi sOrum thuNainIngith
tholkavin vADiya thOL

paNai nIngip – flourish and excellence gone
painthoDi – the maiden wearing golden bracelet
sOrum – has thinned for her bracelet to fall off
thuNainIngith – when her beloved leaves her
thol kavin – her former beauty in
vADiya thOL – the shoulders lost

Once again, a verse about the maiden in love losing the beauty of her shoulders. When the lover of the maiden leaves her, pining his separation, her formerly beautiful shoulders, go thin and lose the beauty; When her flourish and excellence leave her, the golden braceles she is wearing would also fall off her hands.

Since her lover left her, maidens’ former charm of beautiful shoulders lost;
So will diminish her flourish; and her golden bracelet also’ll fall, and be lost”

இன்றெனது குறள்:

கூடினார் நீங்கவும் பண்டழகுத் தோள்களும்
வாடிவளை சோர்வாள் மெலிந்து

kUDinAr nIngavum paNDazhaguth thOLgaLum
vADivaLai sOrvAL melindu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment