குறளின் குரல் – 1283

24th Oct, 2015

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் 
முன்னம் உணர்ந்த வளை.
                             (குறள் 1277: குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)

தண்ணந் துறைவன் – தண் நீர் நிலப்பரப்பின் தலைவனாம் என் காதலன்
தணந்தமை – கூடிப் பின் பிரிந்தமை பற்றி
நம்மினும் – நம்மை விட
முன்னம் உணர்ந்த – முன்னரே உணர்ந்து விட்டன
வளை – நம் வளைகள் (அதனால் கழண்டு விட்டன)

குளிர்ந்த நீர் பரப்பின் தலைவனாம் என்னுடைய காதலன் என்னுடன் கூடி மகிழ்ந்த பிறகு பிரிந்துவிடுவான் என்பதை என்னிலும் என்னுடைய வளைகள் ஏற்கனவே அறிந்தன போலும்; அதனால் அவை கழன்று விட்டன என்று தலைவி தன் தோழியிடன் கூறுகிறாள், இக்குறளில்!

Transliteration:

taNNan turaivan taNandamai namminum
munnam uNarnda vaLai

taNNan turaivan – that my beloved lover of cool shores
taNandamai – would leave me after being with me amorously
namminum – more than us
munnam uNarnda – earlier realized by my
vaLai – bangles (so they would come off my hands)

That my beloved lover of cool shores would leave me after being with me amorously was earlier realized by my bangles before and more than us, so that they would come off my hands, says the maiden to her friend.

“That my lover from cool shores would leave, after mating me,
my bangles knew earlier than we knew; so, off hands they flee”

இன்றெனது குறள்:

தண்நீர் நிலத்தலைவன் நீங்கலை என்னிலும்
பண்டறிந்த தோவென் வளை

taNnIr nilattalaivan nIngalai ennilum
paNDaRinda dOven vaLai

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment