குறளின் குரல் – 1282

23rd Oct, 2015

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி 
அன்பின்மை சூழ்வ துடைத்து.
                            (குறள் 1276: குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)

பெரிது ஆற்றிப் – என்னிடத்தில் பெரிதும் அன்பு பாராட்டி
பெட்பக் கலத்தல் – மேலும் மிகுதியாக என்னோடு கலவி விரும்புதல்
அரிது ஆற்றி – எனக்கு தாங்குதற்கு அரிதாம் பிரிவினை செய்து
அன்பின்மை – அன்பில்லாமல் ( விட்டுசெல்லுகின்ற )
சூழ்வதுடைத்து – குறிப்பினைக் கொண்டுள்ளது.

என்னிடத்தில் மிகுதியாக அன்பினைக் காட்டி, மேலும் நாகன் மகிழும் வண்ணம் மீண்டும் மீண்டும் கலவி செய்து மகிழ்வித்ததெல்லாம், பின்பு என்னால் தாங்கமுடியாத பிரிவைத் தந்து, அன்பில்லாமல் என்னை விட்டு நீங்குதற்கான குறிப்பையே கொண்டதல்லாவா? என்று தலைவி தன் தோழியிடம் தலைவன் பிரிவதற்கான குறிப்பைக் கூறுகிறாள்.

Transliteration:

peridARRip peTpak kalattal aridARRi
anbinmai sUzva duDaittu

perid(u) ARRip – Showering love in excess
peTpak kalattal – and embracing me again and again
arid(u) ARRi – then doing what is difficult for me to bear
anbinmai – without love
sUzva duDaittu – has that sign of leaving me

Showering his love and embracing me for conjugal pleasure again and again, had the signs hidden, that he would leave me without compassion giving me this unbearable pain of separation, laments the maiden about her lover to her friend, about how she reads her lover.

“His showering of immense love and excessive pleasurable embrace
have signs of his impending separation with out compassions’ trace!”

இன்றெனது குறள்(கள்):

மட்டிலன் போடுமேலும் கூடல் குறிப்பன்றோ
விட்டென்னைச் செல்லவன் பின்று!

maTTilan bODumElum kUDal kuRippanRO
viTTennaich sellavan binRu!

குறிப்பன்றோ மட்டற்ற அன்புகாட்டி கூடல்
பிறிவாற்றி துன்புசெய்ய பின்?

kuRippanRO maTTaRRa anbukATTi kUDal
piRivARRi tunbuseyya pin?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment