குறளின் குரல் – 1308

18th Nov, 2015

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்.
                              (குறள் 1302: புலவி அதிகாரம்)

உப்பு அமைந்தற்றால் – உப்பு உணவுக்கு அமைவது போலாம்
புலவி – ஊடலும் (அளவோடு இருத்தல் வேண்டும்)
அது சிறிது – அது சிறிதளவுக்கு
நீள விடல் – நீட்டித்தல் என்பது
மிக்கற்றால் – அவ்வுப்பு கூடியதுபோலாம் (கூடலின் சுவையே கெடும்)

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பது வழக்கு.ஆனால் அவ்வுப்பே சிறிது கூடினாலும் உணவு சுவை கெடும் என்பதும் உண்மை. அத்தன்மைத்தே ஊடலும், காதல் வாழ்வுக்கு! உப்பு சரியான அளவில் இல்லாது, கூடிவிட்டால், உணவின் சுவையும் கெடுவது போலே, காதலருக்கிடையே கூடலும் தேவைக்கு மிகுதியானால் அதன் சுவை கெடும். உப்பும் ஊடலும் குறைவாக இருந்தால் கேடில்லை. கூடினால்தான் சுவைக்குக் கேடே!

Transliteration:

Uppamain daRRAl pulavi adhusiRidu
mikkaRRAl nILa viDal

Upp(u) amaindaRRAl – Like how salt is to food
pulavi – is love quarrel (should be within limits)
adhu siRidu – Even If by small measure
nILa viDal – to extend it (beyond what is tolerable)
mikkaRRAl – like how the the salt is in excess (the taste of union will spoil)

Saltless food is for garbage” is popular saying in Tamil. If that salt is even slightly in excess, it spoils the taste of the the food. Love quarrel is similar to that between lovers. If it exceeds a limit, the love would become sour. It salt is less, we can always add to bring it to taste; Same applies to love quarrel to.

“Love-quarrel is like salt to food
In excess it spoils and not good”

இன்றெனது குறள்:

ஊடல் உணவுக்கு உப்பைப்போல் கூடினால்
கூடலுக்கு இன்றே சுவை

Udal uNavukku uppaippOl kUDinAl
kUDalukku inRE suvai

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment