குறளின் குரல் – 1309

19th Nov, 2015

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் 
புலந்தாரைப் புல்லா விடல்.
                                          (குறள் 1303: புலவி அதிகாரம்)

அலந்தாரை – துன்பமுற்றார்க்கு, குலைந்தார்க்கு
அல்லல்நோய் – மேலும் துன்பத்தைச்
செய்தற்றால் – செய்தாற்போலாம்
தம்மைப் – தம்மை (காதற்பெண்ணணைக் குறித்து)
புலந்தாரைப் – ஊடியவரை
புல்லா விடல் – மேலும் ஊடி கூடாது விடல்.

தம்மை ஊடியவரோடு மேலும் ஊடி கூடாமல் இருத்தல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் நிலை குலைந்தவர்க்கு, மேலும் துன்பத்தைச் செய்தாற்போலாம். இக்குறளும் ஊடலுக்கு ஓரு அளவு இருக்கவேண்டியதை வலியுறுத்தும் குறள். ஊடல் துன்பம் சென்ற குறளின் கருத்தைப்போல் சரியான அளவுக்கு விஞ்சினால் துன்பமுற்றவருக்கும் மேலும் துன்பம். அத்துன்பத்தை செய்பவருக்கும் அது துன்பையே தரும்.

Trasnsliteration:

alandArai allalnOi seydaRRAl tammaip
pulandAraip pullA viDal

alandArai – to those that are miserable
allalnOi – more misery
seydaRRAl – as if causing
tammaip – to self (implied for the maiden)
pulandAraip – to that who is in love quarrel
pullA viDal – not making up with fond embrace.

To extend the love quarrel beyond a point is like causing more misery to that who is already miserable, the maiden thinks in this verse. This verse also suggests the limit of love-quarrel as the previous verse. Extending the love-quarrel beyond a point gives pain to both in love.

“Not making up with the embrace extending love-quarrel
  is to give more misery to someone that is miserable”

இன்றெனது குறள்:

வெறுத்தார்க் கதுநீக்கிக் கூடாமை துன்பம்
உறுத்தாற்போல் துன்பமுற் றார்க்கு (உறுத்தல் – மிகுத்தல்)

veRuttArk kadunIkkik kUDAmai tunbam
uRuttARpOl tunbamuR RArkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment