குறளின் குரல் – 1315

25th Nov, 2015

நீரும் நிழலது இனிதே புலவியும் 
வீழுநர் கண்ணே இனிது.
                            (குறள் 1309: புலவி அதிகாரம்)

நீரும் நிழலது இனிதே – நிழலருகில் உள்ள நீரே குளிர்ந்து இனிமையாக இருக்கும்
புலவியும் – ஊடலும்
வீழுநர் கண்ணே – தம்முடைய அன்பில் வீழ்ந்தவர் கண்ணேதான்
இனிது – இனிமையாம்.

நிழலின் இருக்கும் நீரே குளிர்ந்து இனிமையானதாக இருக்கும். அதேபோன்றே, காதல் தலைவியற்கு தாம் அன்பிற்கு வீழ்ந்தார்கண் ஊடல் கொள்வதே இனிமையானதாகும். அப்போதே ஊடலுக்குப் பின்வரும் கூடலும் இனிதாக இருக்கும். குளிர்ந்த நீரே வேட்கைக்கு இனிதாம்போல்; ஊடலால் ஏற்படும் கூடல் வேட்கைக்கு, அன்பர் அருகிருத்தலே இனிதாம்.

Transliteration:

nIrum nizhaladu inidE pulaviyum
vIzunar kaNNE inidu

nIrum nizhaladu inidE – water body under shade is cool and sweet
pulaviyum – Even love-quarrel
vIzunar kaNNE – with that who has fallen for
inidu – it is as sweet as that.

The waterbody under shade is cool and sweet for quenching thirst; likewise with the man she has fallen in love, even the love-quarrel is sweet, because that quenches the the thirst for sweeter conjugal union, after that.

“Like the waterbody undershade is cool and sweeter,
is the love quarrel with the man she has love for!

இன்றெனது குறள்:

தண்ணிழல் பக்கத்து நீர்போல் இனிதாகும்
கண்ணிறைந்தார் கண்ணூட லாம்

taNNizal pakkattu nIrpOl inidAgum
kaNNiRaindAr kaNNUDa lAm.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment