குறளின் குரல் – 1325

5th Dec, 2015

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் 
இந்நீரர் ஆகுதிர் என்று.
                            (குறள் 1319: புலவி நுணுக்கம் அதிகாரம்)

தன்னை உணர்த்தினும் – அவள் ஊடல் தணித்து ஆற்றினும்
காயும் – என் காதலி காய்ந்து மீண்டும் ஊடுவாள்
பிறர்க்கும் – மற்ற பெண்களிடத்தும்
நீர் இந்நீரர் ஆகுதிர் என்று – நீங்கள் இத்தன்மையராகத்தான் இருப்பீர் என்று

காதலி ஊடியிருக்கிறாளே என்று பணிந்து சென்று அவளைத் தணித்தாலும், அவள் என்னை வெகுளுவாள், “நீர் பிற பெண்களிடத்திலும் இவ்வாறு பணிந்தும் தணித்தும் செய்யும் தன்மை உடையவர்தாமே என்று” கூறி! காதல் பெண்டிரைப் போற்றினும் அவர்கள் ஏதேனும் இவ்வாறு குற்றம் கண்டுபிடித்து வெகுளுவார்கள் என்றுணர்த்தி அவர்கள் மாட்டு யாது செய்வது என்று அங்கலாய்க்கும் குறள்.

Transliteration:

Thannai uNarttinum kAyum piRarkkumnIr
innIrar Agudir enRu

Thannai uNarttinum – Even if I resolve the love quarrel between us, by coaxing her
kAyum – she would still be displeased and angry with me saying:
piRarkkum – even for other women
nIr innIrar Agudir enRu – you would be sweet-talk and coax like this!

To pacify the maiden in love-quarrel, I would coax and cajole her; but she would still be displeased and angry at me accusing me saying, “Even for other women, you would sweet-talk similarly and coax like this”. Even a man bends his back to please his maiden to resolve the quarrel, she would find fault with him for some reason and he would wonder, what would be the right course of action!

“Though I resolved the love-quarrel, between us by coaxing her, It is true,
She would still be angry saying, ‘You would do the same trick to others too’”

இன்றெனது குறள்:

பிணக்கைத்தீர்த் தாலுமவள் ஊடும் பிறர்க்கும்
வணங்கிச்செய் வேனிவ்வா றென்று

piNakkaittIrth tAlumavaL UDum piRarkkum
vaNangichchei vEnivvA RenRu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment