குறளின் குரல் – 1332

Though this verse was supposed to be posted yesterday, due to some unexpected emergency, I was off computer for a day and off. So, posting it today. and todays’ verse will also be posted right after this..

12th Dec, 2015

உணலினும் உண்டது அறல்இனிது காமம் 
புணர்தலின் ஊடல் இனிது.
(குறள் 1326: ஊடலுவகை அதிகாரம்)

உணலினும் – ஒருவர் உண்பதிலும்
உண்டது அறல் இனிது – அவர் ஏற்கனவே உண்டதை செரித்தலே இனிதாம்
காமம் புணர்தலின் – அதேபோல் காமத்தால் காதலியோடு கூடுவதிலும்
ஊடல் இனிது – அதற்குமுன் ஊடுதலே இனிதாம்.

ஒருவர் அறுசுவை உண்டி உண்பதில் இன்பம் உண்மையாக இல்லை. ஏற்கனவே உண்டதை முற்றிலுமாக செரிப்பதில்தான் இன்பமே இருக்கிறது. செரிமானம் சரி வர இல்லையெனில், மேலும் மேலும் உண்பதால் என்ன பயன்? அது துன்பமே தவிர இன்பம் இல்லை. அதேபோல்தான், ஊடல் என்பது முதலில் இல்லையெனில், கூடலில் இன்பம் இராது என்கிறார் வள்ளுவர். ஊடலுக்குபின் வரும் கூடலே இன்பம் தருவது என்று ஊடலின் உவகையை வலியுறுத்துகிறார் இக்குறளில். குறளின் போக்கிலேயே ஒரு மாற்றுக்குறளும், ‘இதுவே முறை’ என்ற முறையில் மற்றொரு குறளும் எழுதப்பட்டுள்ளன.

Transliteration:

uNalinum uNDadu aRalinidu kAmam
puNardalin UDal inidu:

uNalinum – More than eating
uNDadu aRal inidu – digesting what is already eaten is pleasurable
kAmam puNardalin – Likewise, even more than in union with the lover
UDal inidu – love-quarrel is pleasurable (as it yields more pleasure in ensuing union)

In eating feast there is no real delight. It is truly delightful in digesting what has been eaten already completely. If the digestion is not good, what is the use in stuffing the stomach more? It is highly unhealthy and painful eventually. Likewise, if there is no love-quarrel, there is no delight in subsequent union. The pleasurable union is only delightful, when it is after a love-fight. Saying this, vaLLuvar emphasizes the delight of love-quarrel, in this verse.

“It is more delightful to digest food than to keep eating more
Like wise love-quarrel is more delightful, than union before”

இன்றெனது குறள்(கள்):

செரித்தலே உண்பதிலும் இன்பமாம்போல் ஊடல்
புரிதலே கூடலிலும் இன்பு

serittalE uNbadilum inbamAmpOl UDal
puridalE kUDalilum inbu

உணவுக்கு முன்செரித்தல் நன்றாம்போல் ஊடல்
புணர்வுக்கு முன்னினிது காண்

uNavukku munserittal nanRAmpOl UDal
puNarvuku munninidu kAN

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment