குறளின் குரல் – 1331

11th Dec, 2015

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் 
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
                                (குறள் 1325: ஊடலுவகை அதிகாரம்)

தவறிலர் ஆயினும் – காதலன் தவறுகள் ஏதும் இல்லாதவன் ஆயினும்
தாம் வீழ்வார் – தாம் விரும்புகின்ற
மென்றோள் – காதலியின் மெல்லிய தோள்களில்
அகறலின் – (அவளுடைய ஊடலால்) சாய்ந்து முயங்குதலை நீங்குதலிலும்
ஆங்கு ஒன்று உடைத்து – அங்கே ஒரு இன்பம் இருக்கிறது.

இக்குறள் தலைவன் கூற்றாகச் சொல்லப்படுவது. தம்மேல் தவறேதும் இல்லையாயினும், தாம் விரும்புகின்ற தம் காதலியின் மெல்லிய தோள்களில் சாய்ந்து முயங்கியிருத்தலை அவள் கொண்ட ஊடலால் நீங்குவதிலும் ஒரு இன்பம் உள்ளது, என்கிறான் காதற்தலைவன். தலைவனே கூட காதலி தன்னோடு ஊடல் கொள்வதைத்தான் விரும்புகிறான் போலிருக்கிறது, ஏனெனில் ஊடலுக்குப் பின்வரும் கூடலில்தானே இன்பம் மிக்கிருக்கிறது.

Transliteration:

Tavarilar Ayinum tAmvIzhvAr menROL
agaRalin Angon RuDaittu

Tavarilar Ayinum – though the lover has no fault of his
tAm vIzhvAr – for the woman he has fallen for
menROL – from her slender shoulders
agaRalin – even in being away
Ang(u) onR(u) uDaittu – there is a pleasure (thinking of ensuing pleasure)

This verse is said from the man in love; though he has no fault of his own for the maiden to be estranged in love-quarrel, and he has to be away from the nearness of his lovers’ slender shoulders, he knows there is a pleasure in that. Probably he thinks and knows of the ensuing union with his maiden and it is more than the union while in cordial terms.

“Though free of fault, and be away from his maidens’ shoulders, slender 
there is a pleasure for him in that, thinking of ensuing union, his wonder!”

இன்றெனது குறள்:

தங்குற்றம் இல்லெனினும் காதலியின் தோள்நீங்கி
அங்குறும் ஊடலுமின் பாம்

thangkuRRam illeninum kAdaliyin tOLnIngi
anguRum Udalumin bAm

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment