குறளின் குரல் – 1336

16th Dec, 2015

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் 
கூடி முயங்கப் பெறின்.
                             (குறள் 1330: ஊடலுவகை அதிகாரம்)

ஊடுதல் – ஊடலென்பது
காமத்திற்கு இன்பம் – பின்னால் நிகழும் கூடலுக்கு இன்பம் தருவது
அதற்கின்பம் – அவ்வூடலுக்கும் எது இன்பம் என்றால்
கூடி முயங்கப் பெறின் – அதன் அளவறிந்து நீங்கி, காதலர் இருவரும் கூடி மகிழ்வதுதான்.

இப்பெரும் நீதி நூலின் இறுதிக்குறள் இது. இக்குறள் சொல்லும் கருத்து : “காதலர் கூடி நுகரும் புணர்வுக்கு இன்பமாவது, ஊடல் கொள்ளுதலாம். அவ்வூடலும் இன்பமாம், அதன் அளவறிந்து அதனை நீங்கி காதலர் இருவரும் கூடி மகிழ்வதுதான்”. கி.வா.ஜவின் ஆராய்ச்சி உரை பரிபாடல், கலித்தொகை, நாச்சியார் திருமொழி, கம்ப இராமாயணம் இவற்றிலிருந்து பல மேற்கோள்களை ஒப்புமைப் பாடல்களாகக் காட்டியிருக்கிறது.

கலித்தொகைப் பாடலொன்று (92:7.9), இக்குறளின் கருத்தையே இவ்வாறு கூறுகிறது:

“வீழ்வார்ப் பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் தருதல் தகையாதான் மற்று” 

நாச்சியார் திருமொழி பாடலும் இக்குறளின் கருத்தையொட்டி (4:11) இவ்வாறு கூறும்:

“ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை 
  நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர் 
  கூடலைக் குழற் கோதைமுன் கூறிய”

Transliteration:

uDUdal kAmattiRku inbam adaRkinbam
kUDi muyangap peRin

uDUdal – What love-quarrel is
kAmattiRku inbam – that which gives pleasure to the following coitus
adaRkinbam – even for that love-quarrel, what is pleasurable is
kUDi muyangap peRin – knowing the limit of that love-quarrel, be happy in coitus, subsequently

This verse is the finale of this grandeur work of maxims by vaLLuvar. “The true pleasure of coitus between lovers comes out of love-quarrel; but even that love-quarrel is pleasurable when the lovers know the limit to which they can take that quarrel”

kI.vA.jA in his research commentary has quoted from ParipADal, Kaliththogai, nAChiyAr thirumozhi and Kamba Ramayanam, with verses that allude the same the though expressed in this verse.

“For coitus between lovers, love-quarrel adds to their delight
  But making up with coitus after, is better delight for that fight”

இன்றெனது குறள்:

கூடலுக்கு இன்பமென்ப ஊடலே அவ்வின்பம்
ஊடலற்று கூடுதலி லாம்.

KuDalukku inbamenba UDalE avvinbam
UDalaRRu kUDudali lAm

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment