குறளின் குரல் – 616

25th Dec 2013

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் 
மடியாண்மை மாற்றக் கெடும். 
                             (குறள் 609: மடியின்மை அதிகாரம்)

குடி ஆண்மையுள் – தங்குடியினரை ஆள்வதில்
வந்த குற்றம் – வருகின்ற குற்றமானது (ஏதம்)
ஒருவன் – ஒருவர் தம்மை
மடியாண்மை – சோம்பலானது ஆள்வதை
மாற்றக் – மாற்றிவிட்டாலே
கெடும். – அழிந்துவிடும்

இக்குறள் ஒருவனது (ஆளும் பொறுப்பிலே இருப்பவனது) சோம்பலே, அவனது ஆட்சியில் தோன்றும் குற்றங்களும், அவற்றால் வரும் குறைபாடுகளுக்கும் காரணம் என்கிறது. அத்தகைய சோம்பலானது அவனை ஆள்வதை அவன் மாற்றிவிட்டாலே, ஆள்வதில் தோன்றும் குற்றம் அழிந்துவிடும் என்கிறது. 

குற்றம் என்ற ஒருமை எல்லா குற்றங்களுக்கும் குறைபாடுகளுக்குமாகி வந்தது என்றே கொள்ளவேண்டும். பரிமேலழகர் உட்பட சில உரையாசிரியர்கள், குடி, ஆண்மை என்று பிரித்துப் பொருள் கொள்வது தவறே. சோம்பலால் ஒருவர் வீரத்துக்குக் குற்றம் தோன்றுவது உண்மையென்றாலும், குடி, வீரம் என்று இரண்டிலும் வரும் குற்றம் என்று பொருள் கொள்ளக்கூடாது. இரண்டைச் சொல்லிக் குற்றம் என்று ஒருமையில் சொல்வதைவிட, குடிகளை ஆள்வதில் வரும் குற்றம் என்று ஒருமைக்கு ஒருமையில் சொல்வதில் கவிதைத் தவறவில்லை.

ஒரு குற்றம்தான் நிகழும் என்பது தவறாக இருப்பினும், அது மொத்தக் குற்றங்களுக்கும் ஆகிவந்ததாகக் கொள்ளலாம்.

Transliteration:
kuDiyAnma yuLvanda kuRRam oruvan
maDiyAnmai mARRak keDum

kuDi AnmayuL – In ruling his citizens (state)
vanda kuRRam – Any faults in that
oruvan – for a ruler
maDiyAnmai – him being ruled by sloth
mARRak – if he changes that
keDum – will ruin

This verse says that slotfulness is the reason for all faults in a rulers’ rule. If a ruler changes from being ruled by sloth, then faults in his ruling will go away.

Though the word “kuRRam” is said in singular, it means all combined faults here. Commentators including Parimelazhagar split the word “kuDiANmai” as kuDi and ANmai, which does not make sense. Though “slothfulenss” diminishes somebody’s masculine stature (valor), we should not interpret the word as two words, because plurality of things will not be said singularity of some happening, even assuming poetic licence.

“When the ruler changes the state of being ruled by sloth
Any and all faults in ruling his people ruin, in their growth”

இன்றெனது குறள்:

மடிதம்மை ஆள்வதை மாய்த்திடத் தீயும்
குடியாள் வதில்வருமே தம்.

(குடி ஆள்வதில் வரும் ஏதம்)

maDithammai Alvadai mAiththiDath thIyum
kuDiyAL vadilvarumE dam

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment