குறளின் குரல் – 485

16th Aug 2013

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை 
போகாறு அகலாக் கடை.
                               (குறள் 478: வலி அறிதல் அதிகாரம்)

Transliteration:
AgARu aLaviTTi dhAyinum kEDillai
pOgARu agalAk kaDai

AgARu – Agu + ARu – the way that wealth comes
aLav(u) + iTTidh(u) + Ayinum – If the it is a small entry way
kEDillai – nothing wrong with it
pOgARu – pOgu + ARu – the way the wealth gets spent
agalAk kaDai – as long as it is not bigger than the way for incoming wealth

This verse is reflecting what Auvvayyar has said in her work of Nalvazhi. The poem, “Anamudhalin adhikam selavanAl...” says, those who spend more than what they earn, will lose their honor, senses, and regardless of their ways, they will be treated as thieves; also regardless of how many births they take, they will be seen as wicked and evil; even for good people they will be construed as as bad people. The word “mudhal” means investment. So it could be read as “more than the investment”.

What AuvvayAr said in a harsh and hard hitting tone, vaLLuvar says it softly. Even if the way that wealth comes in, is narrower, as long as the way the expenses come and sweep the money away (goes out) is not wider, there is no harm.

This verse seems to imply that income and expenses can be equal, which is not entirely acceptable. Especially when the last verse has spoken about preserving the weath. Parimelazhagar has done the commentay thus because for most part he has followed vaLLuvar very closely. To clarify and say it correctly, I have presented two verses which correct that flaw.

“If the way of income is not broader nor wider 
no harm if the way of expense is narrower”

தமிழிலே:
ஆகாறு – ஆகு + ஆறு – பொருள் வருகின்ற வழி
அளவு இட்டிது ஆயினும் – அளவில் சிறியதாக இருப்பினும் 
கேடில்லை – அதனால் வரும் கேடு ஒன்றும் இல்லை
போகாறுபோகு + ஆறு – பொருள் செல்வழிந்து செல்லும் வழி
அகலாக் கடை. – வரும் வழியை விட பெரியாதாக (அகலாமாக) இல்லாமலிருந்தால்

இக்குறள் கீழ் காணும் ஔவையாரின் நல்வழிப் பாடலை ஒட்டிய கருத்தைக்கூறுகிறது:

ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

அதாவது, ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள். அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர். எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர். இதை “முதலின் அதிகம் செலவானால்” என்று, அதாவது “முதலீட்டுக்கும் அதிகமாக செலவு செய்தால்” என்றும் பொருள் சொல்லலாம்.

ஔவையார் கடுமையாகச் சொன்னதையே நயமாகச் சொல்லுகிறார் வள்ளுவர். பொருள் வருகிற வழியைவிட, போகிற வழி பெரியதாக இல்லாமல் இருந்தால், வரக்கூடிய கேடு ஏதுமில்லை என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. 

இருக்கும் முதல் அல்லது பொருளளவுக்குச் செலவழிந்தால் அதில் தவறில்லை என்பதுபோல் பொருள் வருவது சற்று ஒப்புக்கொள்ளமுடியாத கருத்துதான். பொருளைப் போற்றுவதைப் பற்றி சென்ற குறளில் சொல்லிவிட்டு, இக்குறளில் அதே அளவுக்குச் செலவழிந்தால் தவறில்லை என்று சொல்வது சற்றும் பொருத்தமில்லாத ஒன்று. பரிமேலழகர் உரை வள்ளுவரின் குறளை ஒட்டியே இவ்வாறு கூறுகிறது.

அதுகாரணம் பற்றியே இன்று இரண்டு குறள்களை எழுதி கருத்தைச் சரியான முறையில் வலியுறுத்தியுள்ளேன்.

இன்றெனது குறள்(கள்):

வருவாய் வரும்வழி சிற்றளவா னாலும்
அருகும் வழிகுறுகல் நன்று
varuvAi varumvazhi chiRRaLavA nAlum
arugum vazhikuRugal nanRu

வரவில் பெருகி செலவில் சுருங்க
வரமாய் வரும்வழுவில் வாழ்வு
varavil perugi selavil surunga
varamAi varumvazhuvil vAzhvu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment