குறளின் குரல் – 909

15th Oct 2014

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
                        (குறள் 903: பெண்வழிச்சேறல் அதிகாரம்)

இல்லாள்கண் – மனைவியினிடத்து
தாழ்ந்த – பணிந்து செல்லும்
இயல்பின்மை – ஆண்களுக்கு இயல்பில்லாவொன்றை ஒருவன் கொள்வது
எஞ்ஞான்றும் – எப்போதும்
நல்லாருள் – நல்லோர்கள் கூட்டத்திலே அவனுக்கு
நாணுத் தரும் – வெட்கக்கேட்டினைத் தரும்

இல்லாளுக்கு பணிவதென்பது ஒரு ஆண்மகனுக்கு இயல்பில்லாதவொன்று. இல்லாளிடம் அன்பாக இருத்தல் வேறு, பணிந்து போதல் என்பது வேறு அல்லவா? இவ்வாறு சொல்லுவது பெண்ணியக்கவாதிகளை முகம் சுளிக்க வைக்கலாம். ஆனால், ஒருவரே தலைமையாக இருக்கமுடியும் என்பது, உலகில் எல்லாவித அமைப்புகளுமே நன்றாக நடப்பதற்கான விதி.. நாடாக இருக்கட்டும், அல்லது வீடாக இருக்கட்டும். கணவனே வீட்டின் தலைமையென்பது எல்லா நாடுகளிலும், எத்தனையோ யுகங்களாக இருந்துவரும் அமைப்பு. தலைமை கலந்தாலோசிக்கலாம், கனிவுடன் இருக்கலாம். ஆனால் பயந்து பணிவது தலைமைக்கு அழகல்ல.

அவ்வாறு இயல்பில்லாதவொன்றைத் தன் இயல்பாகக் கொள்வது ஒருவனுக்கு நல்லோர்கள் நிறைந்த இடத்திலே வெட்கக்கேட்டினையே தரும். இல்லாளுக்குப் பணிதல் என்பது, அவளுக்கு அஞ்சி நடத்தலாம்; அது தலைமகனுக்கு அழகன்று, இழுக்கேயாம்.

இங்கு ஔவையார் பாடல் வரிகளை நினைவு கூறுதல் நன்று. “எதிரில் பேசு மனையாளில் பேய் நன்று” என்று கூறிய ஔவையார் மேலும் சொல்லுவது இதோ.

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.

Transliteration:

illALkaN thAzhnda iyalbinmai ennjAnRum
nallAruL nANuth tharum

illALkaN – To his wife
thAzhnda – being submissive
iyalbinmai – that which is not natural to the male of the house
ennjAnRum – always
nallAruL – while in the company of the noble men
nANuth tharum – brings utter disgrace

To be submissive to his wife is not natural to the male of a house. Though pseudo feminists may find it appalling to read the previous statement, the hierarchy is not alien to any normally functioning system either. From governing a country to a house, there must be a functioning head which must be accepted by the system; and the societies across the world have uniformly have been that way for many generations. To be compassionate and express love to wife is different from being submissive. Being submissive to wife, out of fear is not natural for a male. When a man is with such unnatural state of conduct, he will have utter disgrace in the company of noble men.

Auvayyar, the great poetess says, if the wife is not compatible and does not have respect for the husband it is better to adopt ascetic life that too without telling her in advance. She further says, a ghost is better than such wife. 

“To be submissive, fearful to wife is considered unnatural state for a male
Such demeanor and conduct bring utter disgrace in the assembly of noble”

இன்றெனது குறள்(கள்):

இயல்பன்று இல்லாளுக் கஞ்சலது என்றும்
நயமிக்க நல்லோர்முன் நாண்

iyalbanRu illALuk kanjaladu enRum
nayamikka nallOrmun nAN

கீழ்மை மனையாள்முன் தாழும் இயல்பதுவே
பாழ்செய்யும் நல்லோர்முன் நாண்

kIzhmai manaiyALmun thAzhum iyalbaduvE
pAzhseiyyum nallOrmun nAN

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment