குறளின் குரல் – 914

20th Oct 2014

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
                              (குறள் 908: பெண்வழிச்சேறல் அதிகாரம்)

நட்டார் – நண்பர்களின்
குறை முடியார் – இன்னல் நேரங்களில் அவர்களது குறைகளை நோக்கி, நீக்கார்
நன்றாற்றார் – நல்லவையும் செய்யமாட்டார் அவர்களுக்கு
நன்னுதலாள் – அழகிய நெற்றியுடைய பெண்ணை
பெட்டாங்கு – விழைந்து அங்கே
ஒழுகுபவர் – அவ்விழைவிலேயே தம் பொழுதைக் கழிப்பவர்

காவிய நாயகன் இராமனே, மண்மேல் ஆசை கொண்டதால், தாம் தம்முடைய அன்னை உள்ளிட்ட எல்லோருக்கும் ஒரு புண்ணின்மேல் தீயினால் சுட்டாற்போல் துன்பத்தை விளைவித்ததாகவும் வருத்துவதாக ஒரு கம்பராமாயணப்பாடல்; இதுவும் கூட ஒரு பெண்ணின் மேல் (தன் மனைவி சீதையின் மேல் வைத்த ஆசையால்) என்று சொல்லுகிறான்.

“மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்”

இக்குறள் கூறுவது இதுதான்! அழகிய பெண்களை விரும்பி, அதிலேயே தம்நேரத்தைக் கழிப்பவர், தம்முடைய நண்பர்களின் இன்னல்களையும், குறைகளையும் நீக்கார், நல்லவற்றையும் செய்யமாட்டார். மீண்டும் இவ்வாறு உள்ளவர், இன்னவற்றைச் செய்யார் என்கிறார்போல ஒரு குறள், என்பதைத் தவிர குறிப்பாகச் ஒன்றும் சொல்வதற்கில்லை.

Transliteration:

naTTAr kuRaimuDiyAr nanRARRAr nannudalAL
peTTAngu ozhugu bavar

naTTAr – that of friends
kuRai muDiyAr – he will not look at their miseries or remove them
nanR(u) ARRAr – will not do good to them
nannudalAL – a girl of beautiful forehead
peTTAngu – desiring her
ozhugubavar – in that desire lives his life

Kambar says through the epic hero Rama that driven by the desire of land, he himself became the instrument of misery for his mother as if a wound is further inflicted with pain with flame. He further blames himself that he did all because of his love for a girl, referring to Seetha. Though a questionalble thought on part of Rama, the underlying thought reflects what is said in this verse.

Desiring a woman of beautiful forehead (not a requirement though!), a person who spends all his time with here or in that pursuit, will not remove miseries of his friends nor w:ll he do any good to them, says this verse. Once again a verse where he says, a person of this character shall no do such things; Nothing spectacular about this verse.

“Desiring a woman of beauty, a person who dwells in that pursuit
Shall not remove misery of friends nor may do any good of merit”

இன்றெனது குறள்:

பெண்விரும்பி வீணர்கள் நண்பர் குறைகளைக்
கண்நோக்கார் நன்மையும்செய் யார்

peNvirumbi vINargaL naNbar kuRaigaLaik
kaNNOkkAr nanmayumsey yAr

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment