குறளின் குரல் – 952

27th Nov 2014

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் 
கழிபேர் இரையான்கண் நோய்.
                                    (குறள் 946: மருந்து அதிகாரம்)

இழிவு அறிந்து – குறைவாக உண்பதன் பயனை அறிந்து
உண்பான்கண் – அவ்வாறு ஒழுகி உண்பவர்க்கு
இன்பம்போல் நிற்கும் – நோயின்றி, அதனால் மருந்தும் தேவையின்றி, இன்பம் இருப்பதுபோல்
கழி பேர் – மிகுந்த, பெரிய
இரையான்கண் – அளவுக்கு உண்பவனிடத்தில்
நோய் – நோயானது தங்கியிருக்கும்

எவ்வாறு குறைவாக உண்டு, நோயின்றி, மருந்தும் தேவையின்றி, நிறைவாகவும், இன்பமாகவும் வாழ்வார்களோ, அது போல், உண்ணும் உணவின் அளவறியாது, மிகுந்த அளவில், பெரிய உணவு உண்போரிடத்திலேயே நோயிருக்கும்.

உண்டிச் சுருங்குதல் பண்டிக்கழகு” என்றொரு சொலவடை இருக்கிறது; இதைத் தவறாகப் பெண்டிர்க்கழகு என்று ஔவையார் சொன்னதாகச் சொல்வதுமுண்டு. அவ்வாறு ஒருதலைப் பட்சமாக, ஒளவையைப் போன்ற பெண்கவி கூறியிருப்பார் என்பது ஐயத்துக்குரியது, உண்டி சுருங்குதல் வயிற்றுக்கு அல்லது உடலுக்கு அழகு என்பதே பொருந்துவதாம் . பண்டி என்ற சொல் உடலையும், வயிற்றையும் குறிப்பது; குறிப்பாக “தொந்தியைக்” குறிப்பது. இப்பொழுது அந்த சொலவடை இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.

இழிவறிந்து என்றமையின், குறைவாகச் சாப்பிடுவதால், வாதம், பித்தம், சிலேட்டுமம் என்கிற மூன்று ஒரு சமச்சீர் நிலையில் இருப்பதையும், அதன் காரணமாக நோய்முதலியன அண்டாமையும் குறிக்கப்படுகிறது.

Transliteration:

izivaRindu uNbAnkaN inbampOl niRkum
kazhipEr iraiyAnkaN nOi

izivu aRindu – understanding the benefit of small meals is the smart choice
uNbAnkaN – and adapting that as the regimen
inbampOl niRkum – like how one shall be blissful devoid of body related miseries
kazhi pEr – in excess and big
iraiyAnkaN – in a person who guzzles food as such (excess and big)
nOi – diseases will linger and so will related miseries.

Like how a person of short meals, stays fit devoid of diseases and hence any medicine, a person that guzzles with big and excessive eating habit suffers and stays with miseries of diseases, says this verse.

Auvayya, a tamil poetess says, “uNDIch churungudal paNdikkazhagu” – meaning, to have short meals is good for the stomach and hence the body. Though it has been mis-quoted as “peNDirkkazhagu” often, it makes sense to take it as “paNDi”, as the word implies the stomach, especially pot belly; it also means the body.

The usage of “izhivarindu” indicates that by eating small meals (small quantities), keep the balance of air, water and fire elements of the body in perfect equilibrium to prevent diseases and hence the need for any medicine medicine.

In all the verses, so far, it is very apparent vaLLuvar implies prevention as a better cure or medicine.

“Like how small, smart meals keep a person happy and healthy
Gluttonous eating shall make’em unhealthy, miserable and filthy”

இன்றெனது குறள்:

ஊணளவு நோக்கியுண்பார்க் கின்பம்போல் பூணநோயாம்
காணக் கிடைத்ததுண் பார்க்கு

UnaLavu nOkkiyuNbArk kinbampOl pUNanOyAm
kaNAk kiDaithathuN bArkku

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment