குறளின் குரல் – 1244

15th Sep, 2015

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது 
பைந்தொடிப் பேதை நுதல்.
                               (குறள் 1238: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

முயங்கிய கைகளை – காதலியை இறுகத் தழுவியிருந்த கைகளை,
ஊக்கப் – நோகுமே என்று காதலன் சற்றே நெகிழ்த்த
பசந்தது – பசலைப் பூத்ததே
பைந்தொடிப் – பசும் பொன் வளையணிந்த
பேதை நுதல் – பேதைப் பெண்ணின் நெற்றியானது

தோள்களையும், கண்களைப் பற்றியுமே பெரும்பாலும் சொல்லி வந்ததிலிருந்து விலகி பெண்ணின் நெற்றியானது பசலைப் பூத்ததைச் சொல்லுகிறார் வள்ளுவர், இக்குறளில். காதலன் காதலியினை இறுகத் தழுவியிருந்த கைகளை, அவளுக்கு நோகுமே என்று சற்று தளர்த்தினானாம். அந்தப் பிரிவையும் தாங்காத அவளது நெற்றியானது பசலைப் பூத்தது என்கிறார் வள்ளுவர்.

Transliteration:

Muyangiya kaigaLai Ukkap pasandadu
paindoDip pEdai nudal

Muyangiya kaigaLai – my hands that had tightly embraced my lover maiden
Ukkap – relaxed a little (fearing my tight embrace would hurt her)
Pasandadu – became pale
paindoDip – adorned with golden bracelet
pEdai nudal – the maiden’s foreheard

This verse is a deviation from the hitherto verses of this chapter, where VaLLuvar talks about the forehead losing its shine, instead of eyes and shoulders of the maiden. The man relaxes his grip, fearing that it would hurt his beloved maiden, from his tightly embrace. Even that momentary lack of closeness, makes her forehead go pale in the pain of almost neglible separation.

When he relaxes his embrace fearing the hurt for maiden for a short while
Not able to bear that, forhead of maidens, with golden bracelet turns pale “
.
இன்றெனது குறள்:

அணைத்த கரங்கள் அரைநொடி நீங்கப்
பணைத்த நுதல்பசக் கும்

aNaitta karangaL arainoDi nIngap
paNaitta nudalpasak kum

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment