குறளின் குரல் – 1333

13th Dec, 2015

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் 
கூடலிற் காணப் படும்.
                            (குறள் 1327: ஊடலுவகை அதிகாரம்)

ஊடலில் தோற்றவர் வென்றார் – யார் ஊடலில் தோற்கிறாரோ அவரே வென்றவராகிறார்
அது மன்னும் – அவ் வெற்றியானது பெரும்பாலும்
கூடலிற் காணப்படும் – பின்னால் காதலருக்கிடையே தோன்றும் கூடலிலேதான் காணப்படும்

ஊடலில் உவகையை வலியுறுத்தும் மற்றுமொரு குறள். கருத்தொருமித்த காதலர் இருவரிடையே தோன்றுகிற ஊடலில், யார் தோற்கிறாரோ, அவரே உண்மையில் வென்றவராகிறார். அவ்வெற்றியை அவர் உணர்வது, அவர்களுடைய கூடும் போது காணப்படும்; கசப்புக்குப் பின் உண்ணும் இனிப்பைப்போல் இனிமையின் அருமையை உணர்த்துவது போன்றாம் அது.

Transliteration:

UDalil tORRavar veNRAr adumannum
kUDaliR kANap paDum

UDalil tORRavar veNRAr – Whoever loses in the love-quarrel, indeed wins evetually
Adu mannum – mostly that win is
kUDaliR kANappaDum – seen in the union when the love-quarrel is made up between lovers

Another verse emphasizing the pleasure of love-quarrel; between two bonded by love, whoever loses in the love-quarrel, indeed wins eventually; he or she realizes when they make up and are in union subsequently; it is like how sweet tastes sweeter after eating something sour.

“That who loses in love-quarrel wins eventually;
that truth is seen only in the union subsequently”

இன்றெனது குறள்:

தோற்றவர் வென்றாராம் ஊடலில் அவ்வுண்மை
ஆற்றிடும் கூடலில்காண் பர்

thORRavar venRArAm UDalil avvuNmai
ARRiDum kUDalilkAN bar

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment